வறுமை

வறுமை
**********
எனக்கு கண்ணு தெரியாதுன்னு
எல்லோரும் சொல்றாங்க....
நான் ஒரு பிறவிக்குருடனாம்...
எனக்கு எல்லாமே
கருப்பாத்தான் தெரியுமாம்....
மத்தவங்க சொல்லித்தான்
எனக்கே தெரியும்
அதுதான் கருப்புன்னு...
அப்ப எனக்கு
சின்ன வயசு...
சின்ன குடும்பம்...
கூடப்பிறந்தது ஒரு அண்ணன்
மட்டும் தான்...
அப்பாக்கு வருமானம் பெரிசா இல்ல...
இருக்குற காசுல எங்கப்பா
என்மேல அனுதாபப்பட்டு
புதுத்துணி எடுத்துக்கொடுப்பார்...
அண்ணன்
அந்த பழைய கிழிஞ்ச துணிய
போட்டுப்பான்...
ஒட்டுப்போட்டு...
எல்லோரும் அவன
கேவலமா பாப்பாங்க...
நா அப்பப்ப அவன
தடவி பாத்து கேட்பேன்..
" எதுக்குண்ணா இத போடுற...
என் ட்ரெஸ்ஸ போட்டுக்கோன்"னு...
"பரவாயில்லை"ன்னு
சொல்லிட்டு போய்டுவான்...!
அவனும் நானும்
தனித்தனி பள்ளியில படிச்சோம்...
இருக்குற வறுமையில எங்கப்பா
ரெண்டு பேரையும் படிக்க வச்சார்...
இன்னைக்கு எங்கண்ணன்
நல்லா படிச்சி பெரிய வேலையில
இருக்கான்...
எதாவது விசேஷம்னா
எல்லாத்துக்கும் புதுத்துணி எடுப்பான்...
அம்மாக்கு சேலை..
அப்பாக்கு வேட்டி சட்டை...
எனக்கு பேண்ட்டு சட்டைன்னு....
இப்பவும் நா அவன
தடவி பார்த்து கேட்டேன்...
என்னடா எங்களுக்கெல்லாம்
நல்ல துணி எடுத்துக்கொடுத்துட்டு...
நீ இன்னமும் கிழிஞ்ச துணிய கட்டுறியேன்னு...
அதுக்கு அவன்
"ஃபேஷன்"னு சொல்லிட்டு போய்ட்டான்....!!
அப்பதான்
இந்த குருட்டு பையனுக்கு
ஒரு விசயம் புரிஞ்சது...
வறுமையில இருக்கும்போது
மானம் காக்க
கிழிஞ்சத தைச்சி போட்டா
அது கேவலம்....
காசு வந்ததுக்கு அப்புறம்
நல்லாயிருக்கிறத கிழிச்சி போட்டாக்கூட
அது ஃபேஷன்...
கண் இருக்குற அவங்களுக்கே புரியாத போது...
கண் இல்லாத எனக்கு புரியவா போகுது...
கலாச்சாரத்தை பத்தி...!!!
இவண்
✒க.முரளி (spark MRL K)