ஒருநாள் சுதந்திரம் - குமரி
பல அடுக்கு பாதுகாப்பு
நாட்டின் மூலையெல்லாம்...
கோலகாலமாய் என்
நாட்டின் சுதந்திர தினம்.!
கமண்டோ கண்காணிப்பில்
நட்டு வைத்த கம்பத்தில்...
கட்டவிழ்க்கபட்டது என்
நாட்டு தேசியகொடி.!
குண்டு துளைக்காத
முச்சுவருக்குள் நின்று...
பேசபட்டது என் நாட்டு
சுதந்திர உரை.!
வானத்தில் பறக்கிறார்
பார் காண என் பிரதமர்...
கடன் வெள்ளத்தில்
மிதக்கிறது என் பாரதநாடு.!
கார்ப்பரேட்டுகளுக்கு இங்கு
கார்ப்பெட் விரிப்பு....
சுமக்கிறேன் என் முதுகில்
வரிகளை.. வலிகளோடு..!
கோடிகடனாளி வெளிநாடு ஓட
என் சிறுகடன் விவசாயி...
உள்ளறையில் ஓடுகிறான்
சுருக்கு கயிற்றை தேட..!
மாதாவின் பெயர் கூவி
மனிதர்களை வேட்டையாட...
மாட்டுதோல் போர்த்திய
மிருகங்கள் மந்தைகளாய்..!
இயற்கை நீர் வளத்தை
இல்லாமையாக்கி என்னை...
குப்பிநீரை குடிக்க வைத்தர்
குடத்துநீரை மறக்க விட்டார்..
சிறுபெண்டிர் மங்கைகளை
சின்னாபின்னம் ஆக்குகிறார்...
சீறிடுவார் எவருமில்லை
சீராக்க அரசுமில்லை...!
அரியணையில் அமர்த்திவிட்டு
அடிமையாய் வாழ்ந்து விட...
ஆணையிட பட்டு விட்டேன்
என் உரிமைகள் உணராமலே.!
ஆகஸ்டு15 என் நாட்டின்
சுதந்திர தினம்..
அரசியல்வாதிகளின்
சுத்த தந்திர தினம்..!
வாட்ஸ்அப்களிலும்
முகநூல் தளங்களிலும்...
சுதந்திரமாய் வீசிபறக்கும்
ஒருநாள் தேசபக்தி..!
இந்தியனா நான்
வெட்கப்படவா..? இல்லை
வேதனைப்படவா..?
தெரியவில்லை..!
என்றாலும்..
கூட்டத்தோடு நானும்
பாரத மாதா...கீய்..ஜே.!
- குமரி
🤔🤔🤔