காகிதங்கள்
வரையாத ஓவியங்கள்
வடியாத கவிதைகள்
என உள்ளன
பல காகிதங்கள்
வடிந்தபபின்னும்
வடிக்காவிடினும்
தேவையில்லை எனின்
குப்பையாகக்
கசக்கிய காகிதங்கள்
வடிந்தவை வலுவற்றது
எனில் கருத்துகள்
வலம் வரும்
காகிதக் கப்பல்கள்
வாசம் வீசும் வார்த்தைகள்
வாழ்வில் வசந்தம் வீசாவிட்டால்
அந்த காகிதங்கள்
காகிதப் பூக்கள்தான்
காதல் நனைந்தக் காகிதங்கள்
உணர்வுகள் உறைந்தக் காகிதங்கள்
கனவுகள் கற்பனைகள் கலந்தக் காகிதங்கள்
பக்கங்கள் மட்டும் நிரம்பும் காகிதங்கள்
பல காகிதங்கள் என் மனப் புக்கத்தில்
இன்றும் நிரம்பா வெள்ளைக் காகிதங்கள்
- செல்வா
பி.கு: கவிதைமணி இந்த வாரம் வந்துள்ளது .