யார் குற்றம்

==============
மாமியாள் சுடுசொல் தாங்கி
=மடியைத் தடவிப் பார்த்து
சாமியே கருணைக் காட்டு
=சஞ்சலம் போக்கு. எனக்கு
காமியே குழந்தை என்று
=கலங்கிடும் மலடி ஏங்க
சாமிபோல் கிடைத்த தொன்றை
= சகதியில் விட்டதார் குற்றம்?
*மெய்யன் நடராஜ்