விவசாயி - நாகூர் கவி
இராப் பகலு பாராம
சேத்துல நா கால் வச்சேன்
நீங்க வருஷமெலாம்
சோத்துலதான் கை வைக்க...
பொழுதெல்லாம் அந்த
வயலுலதான் நா கெடந்தேன்
பட்டினியால் அழுவாம
தேசத்த நாங் காத்தேன்...
அயல்நாட்டு படிப்பெல்லாம்
நீங்க நல்லாதான் படிச்சிங்க
எங்க நிலப்பரப்ப பாக்காம
சேர்ந்து எல்லோரும் நடிச்சிங்க...
வெவசாயம் முதுகெலும்பு
நமக்குன்னு சொன்னீங்க
வெவரம் பத்தாம முதுகெலும்ப
திக்கொன்னு சுக்குநூறா ஒடச்சிங்க...
கிராமத்து சுத்த காத்தேயும்
நரகப் புகையால ஏனோதான் கெடுத்தீங்க
சிட்டென்ற இனத்தையே அழிக்கதான்
செல்போனு டவரிங்கு கொடுத்தீங்க...
தண்ணீரைதான் காசாக்க பாக்குறீங்க
எங்கண்ணீரையும் தூசாக்கி போகுறீங்க
குருதி கெடச்சா விற்கும் இந்த கூட்டமுங்க
உறுதியா சொல்லுறேன் ஒங்களால நாட்டுக்கு நட்டமுங்க...!