மலர்களே மலர்களே

மலர்களே இதழ் விரிக்கும் வெள்ளை மலர்களே
மங்கையர் இதழ்களில் உங்களுக்கு புன்னகை என்ற பெயரோ ?
மலர்களே மடல் அவிழும் சிவந்த செம்மலர்களே
மங்கையர் முகத்தினில் உங்களுக்கு செவ்விதழ்கள் என்ற பெயரோ ?
மலர்களே அழகாய் விரியும் எழில் மலர்களே
மங்கையர் விழிகளில் உங்களுக்கு தாமரை என்ற பெயரோ ?
மலர்களே அவள் நினைவில் என்நெஞ்சில் விரியும் போது
நீங்கள் கவிதையோ அன்றி காதலோ ?

-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (17-Nov-16, 7:16 pm)
Tanglish : malargale malargale
பார்வை : 162

மேலே