மெரினா புரட்சி
வாடிவாசலை திறக்க
பலகோடி கைகள் கோர்க்க
எட்டுத்திசை எங்கும் எழுந்தனவே
தமிழினத்தின் தன்மான கைகள்.
யார் தலைவர்?,யார் பொதுச்செயலாளர்?
என்கின்ற கட்சி கணக்கை
சொல்லி கொள்ளாமல்,
யார் நீ?,நீ யார்?
என்கின்ற வேற்றுமை கணக்கை
வெட்டியெறிந்து விட்டு,
நான்,நீ,நாம் தமிழர்கள்
என்ற இனமான கணக்கில்
தரணி முழுதும் கூட்டி,
பழமையான பண்பாட்டையும்
காலம் வென்ற கலாச்சாரத்தையும்
அழிக்க வந்த கூட்டத்தை
மிரள வைத்த கூட்டம் - என்
சிங்கத் தமிழ் கூட்டம் என்பதை
உரக்கச் சொன்னீர் உலகிற்கு!
காளையை மீட்டெடுத்த
புறநானூற்று முத்துக்களே!
தமிழின வெற்றியின் தடைக்கற்களை
தடம்புரள செய்வீர்!
வேற்றுமை வேதம் மறப்பீர்!
ஒற்றுமை ஒன்றையே நினைப்பீர்!
நான்,நீ,நாம் தமிழன்...