மதம் பெரியதா அல்லது மதத்தை உடைக்கும் அன்பு பெரியதா

தற்பொழுது இந்தியாவில் மதம் என்ற வார்த்தை அதிகமாக பேசப்பட்டு வருகிறது.காரணம் என்னவென்றால் தன்னுடைய மதத்தை பரப்புவதற்கு அல்லது வளர்பதற்கு பல்வேறு யுத்திகளை அந்தந்த மதத்தை சேர்ந்தவர்கள் மேற்கொண்டுவருகின்றனர்.

மதம் என்றால் என்ன?,மதம் யாரால் தோற்றுவிக்கப்பட்டது?,தோற்றுவிக்க காரணம் என்ன?,அதன் செயல்பாடு என்ன?,அதன் சேவை என்ன?.இன்னும் பல கேள்விகள் நமக்குள் எழுகின்றன.
இது ஒருபுறம் இருக்க மதத்தை பரப்பி அல்லது மதத்தை வளர்த்து,அதனை செயல்படுத்த அவசியம் என்ன?.ஏன் எந்த மதத்தையும் சாராமல் இந்தியாவில் வாழ முடியாதா? அல்லது உலகில் வாழ முடியாதா?.

நம் இந்திய பல மாநிலங்களாக பிரிக்கப்பட்டு இருக்கிறது.அது எவ்வாறு பிரிக்கப்பட்டிருக்கிறது?.மதத்தை வைத்து மாநிலம் பிரிக்கப்பட்டிருக்கிறதா?,இல்லை.

அப்படி பார்த்தல் எல்லா மாநிலத்திலும் எங்கேயோ ஓரிடத்தில் எல்லா வித மதத்தை சேர்ந்தவர்களும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்களே?.மதம் என்பதை எவ்வாறு வேறுபடுத்துவது என்ற கேள்விக்கு நம் அனைவருக்கும் விடை தெரியும்.

ஒரு மதத்தின் கொள்கை,கோட்பாடு,அதன் வழி,நெறிமுறை ஆகியவற்றை வைத்து மதத்தை பிரித்து காட்டலாம்.ஆனால் ஒருவன் இன்னொருவனுக்கு செய்யும் உதவியை அல்லது ஒருவன் இன்னொருவன் மீது செலுத்தும் அன்பை எந்த மதத்தை வைத்து சொல்லுவீர்கள்.

இவன் காட்டுகிற அன்பு இந்த மதத்தின் அன்பு,இவன் செய்யும் உதவி இந்த மதத்தின் உதவி என்று சொல்ல முடியுமா?.முடியாது.இந்த கட்டுரையை எழுதும் நான் ஒரு கிறித்தவ மதத்தை சேர்ந்தவன்,என் மதத்தின் புனித நூலான பைபிள் பிறர் மீது அன்பு செழுத்துங்கள் என்ற வார்த்தையை எடுத்து வைக்கிறது.

எந்த மதத்தின் புனித நூலுமே அன்பு என்ற ஒரு வார்த்தைக்கு அதிக இடம் கொடுப்பதாகவே இருக்கிறது.நாம் அனைவரும் இந்திய தாயின் தவப்புதல்வர்கள்.

மதச்சார்பற்ற நாட்டில் மதத்தை சார்ந்து வாழும் மக்கள்.ஒருவர் மதத்தை ஏற்பது அவரவர் சொந்த விருப்பம்,யார் எந்த மதத்தை தழுவினாலும் அன்பு என்ற ஒன்றை தழுவ மறவாதீர்கள்.
அனைவரிடமும் அன்பு செழுத்துங்கள்.அன்பு என்ற மூன்றெழுத்தில் மூன்று மதத்தையும் அடக்க முடியும் என்று கூறி மதம் என்ற மூன்றெழுத்தில் அன்பு என்ற மூன்றெழுத்தை அடக்கி பாருங்கள்,வாழ்வில் வளமோடு இருங்கள்.

எழுதியவர் : ஆ.ரிச்சர்டு எட்வின் (6-Apr-15, 9:24 am)
சேர்த்தது : richard edwin
பார்வை : 710

மேலே