நுரைத்தெழும்பும் நதிகள்

நுரைத்தெழும்பும் நதிகள்
**************************** எப்பொழுதுமே திறந்த
ஒரு வானத்தைப் போன்றே
அது நகராமலிருக்கிறது
எப்பொழுதும் மூடிய
வனத்தை மேலும் அடர்ந்ததாக்குகிறது
மத்தாப்பு பொரிந்து
யாதொன்றும் நிலையில்லாத
ஒன்றில் நிலையாகிறது
நட்சத்திரக் குவியல்
கண்சிமிட்டி அழைக்கிறது
புரியாத ஒன்றில்
புரிந்திடும் பொருள் பொதிந்த அவை
கீழிருந்து சிறகடித்து வட்டமடிக்கும்
கிளிக்கூட்டம் விரல்களுக்கு
மிக அருகில்
தொட வந்தெனை நுகரும்
அவைகளின் ஸ்பரிசம்
தீண்டுவதற்குள்
மலையுச்சியிலிருந்து
குதித்தே விட்டேன்..
ஆழ்கடலின் நீலச் செழுமையில்
நீந்தக் கற்றுக்கொண்டு இருக்கிறது
அக் குட்டிக் கிளி..


-கார்த்திகா அ

எழுதியவர் : கார்த்திகா அ (17-Oct-17, 8:47 pm)
பார்வை : 823

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே