தீபாவளி நல்வாழ்த்துக்கள்
தீப ஒளியில்
தீங்கு மறையட்டும்
மத்தாப்பு சிரிப்பு
மனதினை நிரைக்கட்டும்
அறியாமை நீங்கி
அகிலம் ஒளிரட்டும்
கல்லாமை ஒழித்து
கல்வி பரவட்டும்
இல்லாமை தகர்த்து
இரப்பு அகலட்டும்
வளங்கள் பெறுக
வாழ்க்கை துளங்கட்டும்
நல்லெண்ணம் தோன்றிட
நன்மக்கள் பெருகட்டும்
இன்பம் செழிக்க
இல்லம் சிறக்கட்டும்
உழவு செழிக்க
உழவன் களிக்கட்டும்
பகலவன் கரத்தில்
பிரபஞ்சம் பிரகாசிக்கட்டும்
மாரி பொழிய
மனங்கள் குளிரட்டும்
ஏற்றம் காணும்
எண்ணங்கள் மலரட்டும்
உற்றார் கூடி
உறவுகள் பேணட்டும்
நட்புடன் சேர்ந்து
நலமோடு வாழட்டும்
மகிழ்ச்சி மேலோங்க
மனமோ நிறையட்டும்
இனிய தீபாவளி
நல்வாழ்த்துக்கள்