எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
அனைவருக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்....
மகளிர் தின நல் வாழ்த்துக்கள் 09-Mar-2016 4:20 am
இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்....
தங்கள் இலக்கியப் பயணம் தொடரட்டும்
நன்றி 09-Mar-2016 12:02 am
குளிர் சேர்ந்த நிலவின் நெருக்கத்தில்எரிந்து வீழும் நட்சத்திர மின்மினிகள்... (கார்த்திகா)
17-Feb-2016 11:20 pm
குளிர் சேர்ந்த நிலவின்
நெருக்கத்தில்
எரிந்து வீழும்
நட்சத்திர மின்மினிகள்
என் விரல் நுனிப் பூக்களாய்!!
மழை கொண்டு வரும்
கவிதைகள் கரிப்பதில்லை!
இனிப்பு 16-Dec-2015 10:34 am
ஈரங்களோடு கனக்கலாம்....... 16-Dec-2015 8:37 am
மெல் வசந்தங்களின் நீர்க் கோர்ப்பில்
திவலைகளின் ஒளிச் சிதறலில்
ரோஜா இதழ்களின் மேல்
பனித்துளிக்குள் பரவியது
என் தீச்சுடர் வானம்!
மிக்க நன்றி ஐயா....தங்கள் வாழ்த்துகளில் மிக்க மகிழ்ச்சி எனக்கு ... 11-Dec-2015 10:27 am
ஆஹா அழகிய நீர்த் துளி மலர்க் கோலம்
மெல் வசந்தங்களின் சொல் வசந்தம்
வாழ்த்துக்கள் கவிப்ப்பிரிய கார்த்திகா
--அன்புடன், கவின் சாரலன் 11-Dec-2015 10:04 am
விட்டு விட்டு
தூறிய மழை
இன்னும் கொஞ்சம்
நனைய விட்டிருந்தால்
என் வயலெட்
பூக்களுக்கு
பனித் துளிகள்
கோர்க்கப்பட்டிருந்தால்
என் வீட்டுத் தோட்டத்திலும்
வானவில்கள் விளைந்திருக்கும்!
சில தருணங்களில் ..விதை பிளந்துமுளைத்ததில்வேர்கள் முட்களாகின்றனகிழிசல் விரிந்ததுமண்ணிற்குள்!... (கார்த்திகா)
17-Oct-2015 12:41 am
சில தருணங்களில் ..
விதை பிளந்து
முளைத்ததில்
வேர்கள் முட்களாகின்றன
கிழிசல் விரிந்தது
மண்ணிற்குள்!
அடடா சிந்தனை அழகு ..! 17-Oct-2015 10:06 am
தான் தோன்றிய
குளம் ஒன்றில்
மீன்களின் இறவா விகிதச்
சரி பார்த்தலின் எண்ணமதில்
சில கொக்குகள் கழுகென்று
கொள்ள(ல்ல)ப்பட்டன!!
மிக்க நன்றி நண்பரே... 21-Sep-2015 12:21 pm
கழுகை கவிதையெனக் கொள்வோம்... அருமை தோழமையே 21-Sep-2015 11:57 am
மரம் நழுவிய
பூக்களில் அடங்கியது
நிலத் துண்டுப் பிளவுகள்..
மிக்க நன்றி நண்பா... 15-Sep-2015 3:46 pm
அருமை தோழி.. 15-Sep-2015 3:40 pm
யாம் கொண்ட சிநேகம்
மழை நுனிச் சிதறல்களில்...
ஓவியம் :சித்திரக் கவியும் சிந்திக்க வைத்தது.
பாராட்டுகள் பல..
உம சிநேகமும் மழைத்துளிகள் வாயிலாக நாம் பயன் பெற உம் கவிகள் பல மலர இறை அருள் வேண்டுகிறோம்
நன்றி. 09-Sep-2015 5:55 pm
அருமை அக்கா 09-Sep-2015 1:39 pm
" யாண்(அழகு) "
யான் கொண்ட சிநேகம்
பிரிக்கமுடியாத
கடல் அலை விவேகம் 08-Sep-2015 9:37 am
மேலும்...