மூச்சிலாக் காற்று

மூச்சிலாக் காற்று
****************
எப்பொழுதோ தொலைத்த
ஞாபக வீட்டிற்குள்
கவனமாக அடி எடுத்து வைக்கிறேன்
முட்களின் கூர்முனைகள்
பாதங்களின் அழுத்தம் ஏற்கொண்டு
உடைந்து போனதும்
நகங்களின் கூர்
செதுக்கப்பட்டது
இன்னும் ஆழமாக
பழகிடாத இருள்
பயமற்றது
முன் நடந்து
வான் பற்றி
விண்மீன் கொய்கிறேன்
சட்டெனக் கையிற் சுடுகிறது
நேற்றிரவில் சிதைந்த
குட்டிப் பூந்தேகம்
வழிகின்ற கண் நீர் வழித்து
வழி திரும்புகையில்
தீயினும் வலியது
வேண்டி நிற்கின்றன
வெளிச்சமிழந்த விடியல்கள்..

-கார்த்திகா அ

எழுதியவர் : கார்த்திகா அ (13-Jan-18, 10:08 am)
சேர்த்தது : கார்த்திகா
பார்வை : 64

மேலே