பூச்சியம்

பூச்சியம்
*************

எதிர்பார்ப்புகள் அற்ற
அந்த ஒற்றை கணத்திற்காய்த்
தவமிருக்கிறேன்

மரங்களின் இலை
உதிரும் தவிப்பு
சருகாகும் எஞ்சிய நேரம்

வேண்டுதல்கள்
சாபங்கள்
குறைகள் நிறைகள் போற்றுதல்கள்
கெஞ்சுதல் மிச்சங்கள்
எச்சத்தின் வடுக்கள்
மீறிய உணர்ச்சிக் கொட்டுதல்
யாவும் யாவரும்
கழிக்கும் பொழுது
அந்தக் கணம்
பிரிவு அல்ல அது
புரிதலின் பேருண்மை
நிஜம் பாராட்டும் நிழல்களின் தேசம்

காத்திருப்பின் கணம்
கனமற்றதாகுக
இருப்பினும்
எதிர்பார்ப்புகள் அற்ற
வெற்று வெளி
காற்றின் ஸ்பரிசம்
உயிரின் தனிமை
மகிழ்வும் துயரும்
வேறுபாடும்
வேறு இல்லாத

வெற்று நொடியைக் கொண்டாடுகிறேன்
அதன் உச்சியின் வெறுமை இல்லை
ஏகாந்தப் பேரின்பம்
என் சரிகளின் இருப்பு
தவறுகளின் இல்லை
இறுமாப்புகளின் உடைதல்கள்
அவற்றிக்காய் உருக் கொண்டது என் காத்திருப்பு

ஒரு நொடி
யாவும் உடைதல்களுக்காய்!

-கார்த்திகா அ

எழுதியவர் : கார்த்திகா அ (26-Aug-18, 12:05 pm)
சேர்த்தது : கார்த்திகா
பார்வை : 115

மேலே