இன்றைய இளமை

பாட்டியும் தாத்தாவும் பல் இல்லை
பழமொழி நிறைய பேசுவார்கள்
அதனால கம்பனும் இல்ல
பருவங்கள் பகுத்துவைப்பார்கள்
வாழ்க்கையின் பாதையை
திகைக்க வைப்பார்கள்
பட்டப் படிப்பு படிக்கல்ல
வாழ்க்கை பாடம் நடத்துவார்கள்
வாழ்க்கையே கண் முன்னே நிறுத்துவார்கள்
வாத்தியாரும் இல்ல
நோய்ப்பட்ட
வைத்தியம் பார்ப்பார்கள்
மருத்துவரும் இல்ல
காவலர்கள் இல்ல
காவலாளிகளாக இருப்பார்கள்
இவர்கள் கதைகளின் களஞ்சியம்
அனுபவத்தில் இணையில்லா நூலகம்
தொலைத்துக் கொண்டிருக்கிறது
முதுமையின் புத்தகத்தை
இன்றைய இளமை .....