சோறு

நாங்கள்
மேகி சாப்பிட்டோம்..

ஓட்ஸூம் கெலாக்ஸூம்
எங்களுக்கு டயட் ஆனது..

ஜீரணம் செய்வதற்கு
கோக் பருகினோம்..

சட்டினி சார்ஸான பொழுது
புளிப்பில் உருகினோம்..

சோளப்பொறியை பாப்கார்ன் என்றழைத்தபோது ஃப்ளேவர்களில்
மயங்கினோம்..

ப்ரான்ட் பார்த்து தாகம் தீர்க்க
பழகிக்கொண்டோம்..

இட்டிலிக்கு சட்டினி இல்லையெனில்
எரிச்சல்படுபவர்கள் பீட்சாவுக்கு
மிளகாய்பொடிகளை தூவிக்கொண்டோம்..

இப்படித் தான் நாங்கள் மறந்துக்கொண்டிருக்கிறோம்
இந்தியாவில் இன்னும் நதிகள்
இருக்கின்றன என்பதையும்
அரிசியின் இரகங்களையும்
உங்கள் வீட்டில் என்ன குழம்பு
என்று கேட்பதையும்...
--கனா காண்பவன்

எழுதியவர் : கனா காண்பவன் (24-Aug-15, 10:45 pm)
பார்வை : 71

மேலே