அரட்டைப் பொழுதின் மயக்கத்திலே

த்ரிஷாவும் சித்தார்த்தும்
கொஞ்சிக்கொள்வது..

ஜெய்யிடம் நயன்தாரா
திட்டித் திட்டி காதல் சொல்வது...

துல்கர் சொல்லும் கண்மணியில்
கண்கள் சுருங்க நித்யா சிரிப்பது...

விழிகள் நான்கும் தொடாத குறையாய்
நெருங்கி நிற்க மாதவனும் சாலினியும்
புன்னகைத்திருப்பது..

இளஞ்சூரியன் துணையோடு யாரோ
இருவரின் நிழல் மஞ்சள் பூக்களின் மீது
முத்தமிட்டுக்கொள்வது..

ரோஸ்காரி சிவப்புக்காரன் நெஞ்சில்
முகம் புதைத்து முதுகில் கையுரசியது..

எண்பது வயதில் கட்டிப்பிடித்தவாறு
வெளிநாட்டு தம்பதியர்கள் செத்துப்போயிருப்பது..

கூகுள் நறுக்கி கொட்டிய இவற்றுள்
சில படங்கள்..
நாம் ஹாய் சொல்லிய சில நாளிலிருந்து நமது சுயவிவரப் படமாக மாறிப்போயிருந்தது...

நாம் காதலிக்கிறோமா?!!
--கனா காண்பவன்

எழுதியவர் : கனா காண்பவன் (22-Aug-15, 11:14 am)
பார்வை : 80

மேலே