விடலைக்கு தெரிந்ததெல்லாம்

சாக்பீஸ் துண்டுகள் எறியப்பட்டன
கண்கள் திரும்பியும்
கவனம் சிதறியிருந்தது...

கிசுகிசுத்த கரிகளால்
கோபத்தோடு வெட்கமும்
வராமலிருக்கவில்லை..

தொடரோட்டம் துவங்க
நீ கண்சிமிட்டிய பின்னரே
விசில் சத்தம் கேட்டது..

அறிவுப்பு பலகையில் அடுத்தடுத்து
இருந்த நம் பெயர்களால்
தேர்வு முடிவுகளை கண்டுக்கொள்ளவில்லை..

நீண்ட நேரம் நாம் பேசுவதற்காகவே
ஆண்டு விழா நிகழ்ச்சிகளை
அவர்கள் நடத்தினர்..

சத்தியமாக
நீயும் நானும் காதலிப்பதாக
நினைத்திருந்தோம்..
--கனா காண்பவன்

எழுதியவர் : கனா காண்பவன் (17-Aug-15, 11:41 am)
பார்வை : 76

மேலே