முலைகளின் கதை
மென் முலைகள்
பருத்து, நின்று
வசீகரித்து,
செவ்வரிகளாகி, சிவந்து
காலை மாலை எவ்வேளையும்
கண் நிரப்பும்
சிறு மலையாகி
பின், மெல்ல மெல்ல
சரிந்து, விழுந்து
மறந்து போகும்
நாளில்
மாராப்பு சரி செய்ய
தோன்றாத
மென் நடையோடு
எங்கள் வீதி அழகி ஒருத்தியின்
கதையை
முடித்து வைக்கிறோம்....
கவிஜி