விழுதுகளுக்கு மனமில்லை

ஏற்க மனமில்லாத
எத்தனையோ தருணங்களில்
விழுதுகளுக்கு அலட்சியம் -
விருட்சங்கள் வீழ்ச்சியில் !

நிழல்கொடுத்த மரங்களுக்கு
பலம் கொடுக்க மறுத்ததால்
பாவமாய் பரிகாச பொருளாய்
எங்கோ எங்கெங்கோ !

உழைத்து உழைத்து
மெலிவின் உச்சத்தை தொட்ட பொழுதும்
உணர்வற்ற விழுதுகளுக்கு
உயிர் தந்தவர்கள் உபயோக மற்றவர்களாகவே !

நிலாச்சோறு ஊட்டியவர்களை
ஊர்சோறு உயிர் வளர்கிறது
நாய்கள் கூட நன்றியோடுதான் இருக்கின்றன
மகன்களை தவிர .

பணமும் பொருளும் இருந்தால் மட்டுமே
பாசம் பற்றிக்கொள்கிறது
இல்லாவிட்டால் பகை விரட்டுகிறது !

கல்லிடம் கருணையும்
கருனையிடம் கடுமையும் காட்டுவதே
காலக்கொடுமை !

மரவிழுதுகள் கூட
நன்றியோடுதான் சுமக்கிறது
மனித விழுதுகளுக்கு மட்டுமே
மனமில்லை !


கவிஞர் சுந்தர வினாயகமுருகன் , புதுவை

எழுதியவர் : வினாயகமுருகன் (17-Aug-15, 8:51 am)
பார்வை : 47

மேலே