எதிர்பார்ப்பு
![](https://eluthu.com/images/loading.gif)
ஒற்றுமை ஓங்கவும் ஊர்சனம் வாழவும்
பற்றுடன் எம்மவர் பட்டதை மாற்றவும்
இட்டிட வாக்குகள் உள்ளது
சற்றதை சிந்தனை செய்திடல் நல்லதே!
நல்லது என்பதை சொல்வதில் மாத்திரம்
நல்லவர் ஆனவர் நாவது கக்கிடும்
பொய்களை நம்பிடல் விட்டினி
உய்திட வாக்கது இட்டிடு ஓங்கவே!
வன்முறை நீங்கவும் வந்தவை மாற்றவும்
பொன்னெழில் பூக்கவும் புன்னகை சிந்தவும்
இம்முறை நீயிடும் வாக்கினில்
நல்லதோர் சூழ்நிலை தான்வர வேண்டுமே!
*மெய்யன் நடராஜ்