நடமாடும் நதிகள் 23 - கற்குவேல் பா

1.~*

வாழ்ந்த சித்திரங்கள் ,
ஆங்கே வலிகளின் சுவடுகளாய் ;
முதியோர் இல்லம் !

2.~*

பொய்த்த மழை ,
நாற்றோடு கருகிய நம்பிக்கை ;
விவசாயி தற்கொலை !

3.~*

மாறிய பிறப்புறுப்பு ,
மகிழ்வு தராத சுகப்பிரசவம் ;
அச்சத்தில் பெண்சிசு !

4.~*

கனவினில் புத்தகம் ,
கடவுளுக்கு நன்றிகூறி எழுகிறான் ;
குழந்தைத் தொழிலாளி !

5.~*

தண்டனை ரத்து ,
கைமாறிய காந்திய நோட்டுகள் ;
சட்டம் விற்பனைக்கு !

6.~*

விலைபேசிய மாது ,
இலவசமாய் கொடுத்துச் சென்றாள் ;
பாலியல் நோய் !

7.~*

அழுகையுடன் மகள் ,
விற்பனைக்குத் தயாரான காணிநிலம் ;
வரதட்சணைக் கேள் !

8.~*

பிரிவுக்கு ஒருவிலை ,
நிர்ணயித்தது உயர் பல்கலைக்கழகம் ;
விரைவில் வல்லரசு !

9.~*

இயற்கைப் பேரிடர் ,
அடித்துச் செல்லப்பட்ட குடிசைகள் ;
அரசியல் செய்வோம் !

10.~*

வெட்டப்பட்ட மரங்கள் ,
திறக்கப்பட்ட பெருநிறுவன மடங்கள் ;
எங்கும் ஓம்சாந்தி !

- பா . கற்குவேல்

( நதியோடு இணைத்த திரு ஜின்னா ,
வடிவம் கொடுத்து உதவிய திரு கமல் காளிதாஸ் ,
பெயர் பதித்து உதவிய திரு ஆண்டன் பெனி ,
அரவணைத்துச் செல்லும் திரு முரளி - என
அனைவருக்கும் நன்றி கூறிக்கொள்கிறேன் )

எழுதியவர் : கற்குவேல் பாலகுருசாமி (28-Feb-16, 12:02 am)
பார்வை : 307

மேலே