அம்மா
நான் ஐந்து மாத கருவாக இருக்கும் போதும் ஐந்து மைல் நடந்து பட்டாசு ஆலையில் வேலை செய்தாய்!
என் கல்லூரி படிப்பிற்காக கண்டவரிடம் கடன் வாங்கி என்னை கம்ப்யூட்டர் என்ஞினியர் ஆக்கினாய்!
இந்த படிப்பினால் தானே உன்னை பிரிந்திருக்கிறேன் இன்று!
ஒரு வேளை படிக்காமல் இருந்திருந்தால் நம் ஊரில் நம் வீட்டில் உன்னுடன் இருந்திருப்பேன் இன்று !