விடியல் பிறந்தது

கண்கள் பனித்தபோது
துடைத்திட வந்த
பட்டுப் பூவடா மகனே!
உன்னை வளர்க்க
போராடும் பேதைக்
கண்கள் தேடிய
பாதையில் வருடிய
சுகமான தென்றல் நீ!
ஓடோடி வந்து
துயர் துடைக்க
உன் தாய்க்கு
உறவுகள் உபயோகமில்லை!
உன் தளிர் கரங்களும்,
உன் பொன் அதர சிரிப்பும்,
உன் தேனமுதப் பேச்சும்,
உன் முல்லை அரும்பின் மென் பாதங்கள்,
தத்தி தத்தி நடக்கும் நடையும்
அம்மா
தூக்கி சுமந்த சுமைகளும்,
ஆற்றியப் பணிகளும்,
மனதில் சுமந்த வலிகளும்,
உடலில் வந்த நோய்களும்,
எதிர்கால பயமும்
இருட்டில் ஏற்றப்பட்ட சிறு தீபமாக
புயலுக்கு நடுவில் பூந்தென்றலாக
என் துயரங்களுக்கெல்லாம் வரும் முடிவாக
நாளை என்ற விடியலாக விளங்கிடட்டும்
உன் கைகளின் கண்ணீர் துடைப்பு

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (25-Feb-15, 8:55 pm)
Tanglish : vidiyal pirandhadhu
பார்வை : 131

மேலே