நிரந்தர அழகு

காற்றோடு ஆடும் கார்மேகம் அழகா ,
உன் காதோராம் ஆடும் கருங்கூந்தல் அழகா ?

பௌர்ணமி வானின் நிலா அழகா,
கண்ணக் குழிகள் விழும் உன் முகம் அழகா?

மழை கண்ட மகிழ்ச்சியில் துள்ளி குதித்தாடும் மீன்கள் அழகா ,
என்னை கண்டும் காணாமல் நடிக்கும் உன் வேல் விழிகள் அழகா?

கார்மேகம் மழை பொழியாமல் காற்றோடு போகலாம்.
உன் கார்கூந்தல் வெளிறி வெண்மை ஆகலாம் !

பௌர்ணமி நிலா தேய்பிறை காணலாம்,
கண்ணக் குழிகள் மறைந்து கண்ணமே குழியாகும் வயதாகலாம்!

மழை இல்லா குளம் வற்றி மீன்கள் அங்கு மறையலாம் ,
உன் கண்கள் பொலிவு மாறலாம் காலங்கள் மாறும் போது!

என்றும் மாறாத , என்றும் மறக்காத நாம் காதலே அழகு !

எழுதியவர் : பாண்டி (18-Mar-15, 9:57 pm)
Tanglish : NIRANTHARA alagu
பார்வை : 136

மேலே