கல்லூரி காதல்

உனக்கு ஞாபகம் இருக்கிறதா ?
முதல் முதலாய் எப்போது நான் உன்னிடம் பேசினேன் என்று?
பசுமரதத்தாணி போல இன்னும் ஞாபகம் இருக்கிறது!
பள்ளி நண்பனை போல் சிறந்த நண்பன் யாரும் வர போவதில்லை என நினைத்த எனக்கு , உன்னை போல தோழி யாரும் வர முடியாது என உணர வைத்தவள் நீ !
என் தாய் தங்கை போல, நீயும் நான் கூறாமல் என்ன நினைத்தேன் என சொல்ல தெரிந்தவள் !
கல்லூரிக்கு நீ மருதாணி வைத்து வந்தால் , கைகள் சிவக்கின்றதோ இல்லையோ அழகாக இருக்கின்றது என நான் கூறக் கேட்டு வெட்கததில் உன் கன்னங்கள் சிவக்கும் !
கடவுள் உனக்கு முட்டை கண்களை படைத்தது நான் முட்டைக் கண்ணி என அழைக்கத் தானோ என தோன்றும்!
எத்தனையோ இரவுகள் தூங்காமல் பேசி இருப்போம்!
குட் நைட் சொல்லி தூங்க போகையில , நான் ஏதும் மீண்டும் கூற மாட்டாயோ என நானும், நீ ஏதும் கூற மாட்டாயோ என நானும் தவித்திருப்போம் !
புரிதல் அன்பு இந்த ரெண்டு தானே காதல் என, நான் என் காதல் கூற பெண்ணுக்கே உருவான அம்மா, அப்பா என அனைத்தும் யோசித்து வேணாம் என்றாய்!
எனக்கும் தெரியும் , நீ ஒரு சூழ்நிலைக் கைதி என்று !
ஆனாலும் பின்னாளில் கேட்காமல் விட்டதை எண்ணி வெம்ப கூடாது என எண்ணி கேட்டு விட்டு, இப்போது கேட்டு விட்டு வெம்பிக் கொண்டு இருக்கின்றேன் !

எழுதியவர் : பாண்டி (12-Oct-15, 11:04 pm)
Tanglish : kalluuri kaadhal
பார்வை : 130

மேலே