பாவலன் எல்லப்பன் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : பாவலன் எல்லப்பன் |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 30-Aug-2020 |
பார்த்தவர்கள் | : 8 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
பாவலன் எல்லப்பன் செய்திகள்
பாதசாரி...
வாயிற்படி அற்ற
அவனின் குடியிருப்பு
விலாசம் கேட்டு
வருபவர்களுக்கு
தெருமுனை மட்டுமே
விளக்கம்.
எனக்கு அவனை
நன்றாகவே தெரியும்
கடும் கோபத்தில்
ஒரு முறை அவனை
வஞ்சித்திருக்கிறேன்
நடைபாதையை
ஆக்கிரமிப்பு செய்து
நான்கு ஆணியம்
ஒரு கோடியும் வைத்து
அவன் குடி செய்ததற்காக.
என் முகம்
சுளிப்பிற்குப் பிறகும்
ஒரு நாளும்
என்னை அவன்
வினோதமாக பார்த்ததில்லை.
எல்லோரின் முகங்களை
மறந்திருப்பதைப் போன்று என்னையும் மறந்திருந்தான்.
நோயால் பீடிக்கப்பட்டு
அவன் உடலிலும்
வாய்.... கைகளிலும்...
ஈக்களும் எறும்புகளும்
இன்னும் சில
பெயர் தெரியாத
ஒட்டுண்ணிகளும்
ஊர்ந்து சென்றும்
பறந்து சென்றும்
இருந்தன.
என் விடுமுறை
தினங்களுக்குப் பிறகு
அதே நடைபாதை
அதே மக்கள் கூட்டம்
நடந்து சென்றனர்.
அந்த குடியிருப்பை
நெருங்கும் போதுதான்
எவ்வளோ ஒருத்தி?
நாற்பது வயது
மதிக்கத்தக்க ஒருவனுக்கு
பத்துப் பதினைந்து
வயதிலுள்ள
மழைச்சாரலில்
இத்துப்போன
அழுக்கு புகைப்படத்திற்கு
சூடம் எற்றி
காண்பித்துக் கொண்டிருந்தாள்.
ஒட்டிய கன்னங்கள் குழி விழுந்த கண்கள்
முகம் மழிக்காத
சில்லிடும் மயிலாக
இருந்த அவனை
என்னால் ஓர் ஓவியமாக
வரைந்து தரக்கூடும்.
ஆனால்....
கடைசிவரை
அவனுக்காக கலங்காத
என் நெஞ்சம்
என் கைகளில் இருந்து
ஒரு சிறந்த ஓவியமும்
கவிதையும்
படைக்க முடியும்
என்பது எப்படி சாத்தியம்?
இப்படிக்கு
- பாவலன்.
உன் மீது
கொண்ட
காதலைச்
சொல்வதற்கு
எனக்கு
ஒரு அவகாசம்
கொடு...!
ராமனுக்காக
தன் இதயத்தை
திறந்து காட்டிய
அனுமனைப் போல
தன் நண்பனுக்காக
தலையைக் கொடுக்க
முன்வந்த
குமனனைப் போல
அல்லாமல்
என் காதலை
மெய்ப்பிக்க
ஒரு அவகாசம்
கொடு..!
அத்தனை
உள்ளடக்கத்தையும்
உணர்வையும்
வெளிப்படுத்த முடியாது
என் காதலே
ஒரு அவகாசம்
கொடு...!
நான் நானாகவும்
நீ நீயாகவும்
இல்லாமல்
நாமாக இருக்க
எனக்கு
ஒரு அவகாசம்
கொடு
என் காதலே...!
உன் பாலிய காலத்து
சிநேகிதர்கள் போல
நாம் எந்த உணர்வும்
இல்லாமல்
சலனமற்று இருப்போம்
அதனால்
என் காதலே....
எனக்கு
ஒரு அவகாசம்
கொடு...!
தீ மிதித்தக் கால்கள்
சுடுவது போன்று
இந்த உலகம்
நம் காதலை
ஏற்க மறுக்கிறது.
என் தேவதையே...!
நம் காதலை
கொப்பளித்து கொப்பளித்து
காரி உமிழ்வோம்
இந்த உலகை..!
என் காதலே
எனக்கு ஒரு
...........
இப்படிக்கு
- பாவலன்.
மேலும்...
கருத்துகள்