balaiyer - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : balaiyer |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 26-Dec-2016 |
பார்த்தவர்கள் | : 7 |
புள்ளி | : 0 |
!! புத்தாண்டு திட்டங்கள் !!
நாளையில் இருந்து
நாலு மணிக்கே எழுந்திடனும்
நாப்பது வயசு தாண்டியாச்சு
ஜாக்கிங், யோகான்னு
எதாச்சும் ஆரம்பிக்கணும்,
முடிஞ்சா இந்த ஜிம்முல
சேர்ந்துடறது நல்லது.
காலையில எழுந்ததுமே
காபி சாப்பிடரத விட்டுட்டு
எதாச்சும் உடம்புக்கு நல்லதா
அருகம்புல் சாறு
இஞ்சி தேநீர் மாதிரி
குடிக்கப் பழகனும்.
வாரம் தவறாம தலைக்கு
எண்ணெய் தேய்ச்சு குளிக்கணும்
வாரா வாரம் பக்கத்துல இருக்கற
கோயிலுக்கு போகணும்.
முடிஞ்சா ஏகாதசி, பிரதோஷம், சதுர்த்தி
அப்படின்னு ஏதாவது விரதம் ஒன்னு
கடைபிடிக்க ஆரம்பிக்கணும்.
மாசம் ஒருதடவையாவது குடும்பத்தோடு
சினிமா போகணும், திரும்பும்போது
ஹோட்டல்ல தான் டின்னர்.
பசங்க மேல் படிப்புக்கு பேங்க் RD திறக்கணும். குடும்பத்துல எல்லார்க்கும்
சேர்த்து மருத்துவ காப்பீடும் எடுக்கனும். இப்படி பல திட்டங்களை வகுத்தபடியே படுக்கைக்குப் தூங்கப் போனான் பாலா..
மறுநாள் காலை 8 மணிக்கு எப்பவும்
போல சோம்பலுடன் தாமதமாக எழுந்து காபி சாப்பிட்டபடி தொலைக்காட்சியில் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகளை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான் அவன்..
ஒவ்வொரு டிசம்பர் இறுதி வாரத்திலும் இம்மாதிரி திட்டம் போடுவது 20 வயதில் ஆரம்பித்தது. 40 வயசுலயும் மாறல, 60 வயசுக்கும் அப்படியே தொடரும். திட்டங்களின் எண்ணிக்கை தான் கூடுகிறதே தவிர குறைந்தபாடில்லை..
இனிய காலை வணக்கம்
அன்பன், ஆர்.வீ. பாலா
26.12.16..