யோகேந்திர நிருருதிஸ் மகோ - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : யோகேந்திர நிருருதிஸ் மகோ |
இடம் | : பீளமேடு, கோவை |
பிறந்த தேதி | : 15-Jan-1999 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 12-Sep-2017 |
பார்த்தவர்கள் | : 18 |
புள்ளி | : 0 |
நான் கவிப்பிரியன்... தமிழ்ப் பயில்வன்...
உன்னில் நீ
திரும்பிப் பார்!
நீ பிறந்தவுடன்
உனக்கு சூட்டப்பட்ட
பெயரைத் தவிர, வேறு
எந்த அடையாளம்
உன்னை உலகிற்கு
அறிமுகப் படுத்துகிறது?
எங்கே சொல்!
சான்றோரிடம்
கைகுலுக்கி எடுத்துச்சொல்ல
உனக்கு
உன்னைப் பற்றிய
செய்திகள் உண்டா,
சிந்தனைகொள்!
'என் நண்பன்'
என்பது தவிர
மற்றவர்களிடம்
வேறு எதைச்
சொல்லி
உன் நண்பன்
உன்னை
அறிமுகப்படுத்த முடியும்,
வெட்கப்படு!
வா!
இதுவரை விளையாடிய
கூழாங்கற்களும்
பச்சைக் குதிரையும்
போதும்!
இனி உன்
வாழ்க்கையுடன்
பந்தயங்கட்டிப்
போரிடத் துவங்கு!
உன் சன்னல் வழியே
எட்டிப் பார்!
உன் கதவுகளிலிருந்து
காலடி தூரம்
கடந்தாலே
வீசுவது அத்தனையும்
வியாபாரக் காற்றுதான்!
மறந்துகூட
சுவாசித்து விடாதே;
அதன் விஷம்
உன் நுரையீரலைக்
கிழித்துவிடும்.
இப்படிப்பட்ட
சமூக மாசுபாட்டில்
உன்னை
கறையற்றவனாக
எப்படி
பாதுகாத்துக் கொள்ளப்
போகிறாய்,
விடை சொல்!
எழு!
ஊன்றி நட!
ஆனால் சிதறி
ஓட முயற்சிக்காதே!
உன் கால்களைக்
கிழிப்பதற்காகவே
சிதைந்த முகத்துடன்
உன் வழிமீது
தவம் கிடக்கின்றன
தோற்றவனின்
காய்ந்த
எலும்புத் துண்டுகள்!
பதறாமல் எழுந்துநில்;
உன் பாதைகளில்
படர்ந்து கிடக்கும்
உடைந்த
கண்ணாடித் துகள்களுக்
கிடையே
விழுந்து கிடக்கும்
உன் அடையாளத்தை
பொறுக்கிக் கொள்ளும்
தேடலுக்கு
ஆயத்தப்படு!
உன் பயணங்களில்
பூக்களின் குவியலை
எதிர்பார்த்தே
நடக்கத் துவங்காதே!
இரத்தத் துளிகளையும்
ரோஜா மொட்டுகளாய்ப்
பார்க்கும் கண்களை
கடன்வாங்கு
கற்றவர்களிடம்;
கசந்த அனுபவங்களைச்
சேகரித்து
சுகந்த பாடங்களைப்
பிழிந்தெடு,
பட்டறிந்தவர்களிடம்!
மாற்று!
உள்ளபடியே உன்னைக்
காட்டும்
கண்ணாடியை அல்ல;
பிம்பத்திற்குப்
பின்னால் படரும்
இருண்ட
பாதரசத்தை மாற்று!
மாறு!
ஊரான்போலவே
உளறிக்கொண்டு
பழிசொல்லும்
பயித்தியக்காரனாய்
அல்ல!
அதிகார நாற்காலியின்
அசைக்கவியலா
மூலதனமாகவே மாறு!
சுமந்துவந்த
மூடத்தனங்களை
மூட்டைக்கட்டி
நெருப்பிலிடு!
உன் அறிவை
அவ்வப்போது
ஆராய்ச்சி செய்!
மழுங்க மழுங்க
உடனுக்குடன்
பதம்பார்த்துக்கொள்!
காற்றோடு
நகர்ந்து செல்லும்
பாய்மரக் கப்பலாய்
இருக்காதே!
எதிர்காற்றிலும்
ஜுவாலிக்கும் (சுடர்விடும்)
தீப்பந்தமாய்த்
திரண்டெழு!
மாறு - மாற்று,
எழு - எழுப்பு,
உனது முதல்
சிறந்த படைப்பாய்
உன்னை நீயே
வடிவமைத்துக்கொள்!
இறுதியில்
வெற்றியாளனாய்
வென்றெழுவாய்
உன்னில் நீ
- நற்றமிழ் நண்பன்
ம. கோ யோகேந்திர நிருருதிஸ்.