என்னவன் இனி எனக்கில்லையா???

நான் என்னவனை பார்த்து பழக ஆரம்பித்த நாட்களிலேயே அடிமை கையெழுத்து போட்டுகொடுத்துவிட்டேன்.. வருடம் ஆறாகி விட்டது..ஒவ்வொரு நாளும் நொடியும் அவன் மீதான காதல் அதிகரிக்கவே செய்கிறது.
இரண்டாம் ஆண்டிலேயே பிரிந்து போன எங்கள் காதல் இந்த நான்கு ஆண்டுகளாக ஒரு தலை காதலாக மாறிப்போனது.. அவன் இல்லாமல் வாழ முடியாமல் நான் சாக முயன்றும் தோற்றுத்தான் போனேன்.. நண்பன் என்ற போர்வையில் எங்களது பேச்சு தொடர்ந்தாலும்
\"நான் உன்னுடையவன் இல்லை\" என்று அவன் கூறுவதும், \"என் உயிரே நீதான்\" என்று நான் கூறுவதும் கூட தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அவனது வார்த்தைகள் மட்டுமே என்னையும், என் வாழ்வையும் மாற்றுகிறது..(ஓராண்டுகளாக வேலை இல்லாமல் இருந்த எனக்கு ஒரே மாதத்தில் 7 வேலைகளை வாங்க முடிந்ததே )... எப்படியும் என் வாழ்வு அவனுடன் என்று வாழ்கிறேன்..அவனோ நான் வேறு பெண்ணை காதலிக்கிறேன் என்று கூறியதோடு மட்டுமன்றி அவனை மறக்க சத்தியம் செய்ய வைத்தும் விட்டான்.. நொடி பொழுதும் அவன் நினைவின்றி இருக்க முடியமால் அவனுக்கு கால் செய்து அழுகிறேன்.. உயிருக்கு மேலான என் கேடியை மறக்க முடியாமல், விலக முடியாமல் தவிக்கிறேன்..அவன் மீது செய்து கொடுத்த சத்தியம் ஒரு புறம் பயமுறுத்த மறுபுறம் முன்பு நாங்கள் செய்து கொண்ட சத்தியங்கள் போயாகிவிட்டதா? என்று manam வதைக்கிறது? என் கேடி எனக்கென்று நான் போராடுவது தவறா?????? ;((



கேட்டவர் : honey kumaran
நாள் : 29-Oct-12, 12:21 am
0


மேலே