சுபபாலா - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  சுபபாலா
இடம்:  கிளிநொச்சி
பிறந்த தேதி :  31-Aug-1973
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  03-Apr-2014
பார்த்தவர்கள்:  112
புள்ளி:  49

என்னைப் பற்றி...

அறிமுகம் ......!!!
ஈழத்தில் கிளிநொச்சி அம்பாள் குளமே ....!
எனது தாய் வீடு
கனகபுரத்தில் கல்வி கற்றேன்
உயர்கல்வி 1990 ல் முடிந்ததது ......!
மிகுதி யாவும்
கண்ணீரானது .......!
அன்று தொட்டு இன்று வரை
கவிதையே எனது உயிர்
இதுவரை ஒருநாளும் கவிதை எழுதாமல் தூங்கியது இல்லை
அந்த கவிதைகளின் தாலாட்டில் தான் வாழ்கிறேன்
கொஞ்சம் ஓய்வு கிடைத்து வெளியில்
வந்தேன்
கவிதைகள் உலகம் எல்லாம்
இதயங்களை தேடி தந்தது
அந்த தேடலின் பாடலே
உங்கள் வலைபக்கத்திலும்
வாசனையாகியது
என் கவிதைகளை வாசிக்கும் நேசிக்கும் அனைவருக்கும்
சுபபாலாவின் வாழ்த்துக்கள் .....!!!!!

என் படைப்புகள்
சுபபாலா செய்திகள்
சுபபாலா - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Apr-2014 3:53 pm

வயிற்று பசியோடு
மட்டுமல்ல ....!உயிர் தேடல் பசியோடும்
எப்போதும் தாகமாகவே இரு ....!!!
அப்போது தான்
உன் தேடல் வெறி கொள்ளும்
உன்னை தேடி வெற்றி வரும் .....!!!!
சுபபாலா

மேலும்

அருமை அண்ணா 31-Aug-2014 9:27 am
சுபபாலா - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Apr-2014 3:52 pm

தாய் நாட்டை இழந்தவனுக்கும்
தாய் இல்லாமல் வாழ்பவனுக்கு ம்
மட்டுமே தெரியும்
இந்த வாழ்க்கையில்
நொடிக்கொரு முறை செத்து பிழைப்பது எப்படியான வலி என்று ......!!!! /வெளிநாடு

மேலும்

உண்மை நன்று அண்ணா 31-Aug-2014 9:28 am
சுபபாலா - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Apr-2014 3:51 pm

உடன்பிறப்பு.......!!!
உலகில் தாயின் வரங்களில்
தவமாய் கிடைப்பது சகோதிரங்கள்
உண்மையில் உயிரோடும் உதிரங்கள் .....!
அண்ணன் தம்பி அக்கா தங்கை என்ற
சொல்லுக்குள்ளேயே
வாழ்வின் உலகம் இருந்தது அன்று
வளரும் வரை அணைத்து காத்து
வைத்திருந்தது தாய்தந்தை அன்பு ....!!!
பருவங்களும் வாழ்வின் தேடல்களும்
திசை தேட
அன்பின் அடர்த்தி கொஞ்சம் கொஞ்சமாக குறைவது இயல்போ ...!!!
காரணம் இல்லாமல் மூழ்கி போவது
சமுகமுறையோ ....?
ஒரு குடில் வீட்டுக்குள் படித்து உறங்கி
பறித்து தின்று
அண்ணா சொல் கேட்டு
அக்காவின் கதை கேட்டு
தம்பி தங்கைகளுடன் தாலாட்டு பாடி மகிழ்ந்த அன்புகள்
வளர்ந்து வாழ்க்கையாகும் போது

மேலும்

சுபபாலா - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Apr-2014 3:50 pm

ஒரு முதியவரின் ஒற்றை சொல்
வாழ்வில் நாம் படிக்கும்
திருக்குறளின் பொருள் போல்
உண்மையின் நீதியாகும் .........!!!!
ஆதலால்
முதியோரை நேசியுங்கள்
அவர்கள் முன்னுரையை யாசியுங்கள்
உங்கள் வாழ்க்கை அழகாகும்
அவர்கள் வாழும் நாட்களும்
உங்களால் இன்னும் அழகாகும்

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே