Anamika maya - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Anamika maya
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  16-Apr-2020
பார்த்தவர்கள்:  20
புள்ளி:  1

என் படைப்புகள்
Anamika maya செய்திகள்
Anamika maya - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Apr-2020 4:28 pm

போதையை நினைக்கும் போதெல்லாம்
போதும் என்று என் மனம் சொன்னதில்லை

போய் சேரும் நாள் வரும் வரை
நானும் போதையை பிரிவதில்லை

என் கவியை படிக்கும் மனிதமனமே
நீ நினைக்கும் போதை அல்ல
என் போதை

என் வரிகளில் கேள் ......
நான் சொல்லும் போதை

பருவத்தில் கொண்டேன் காதலின் போதை
காலம் வரவும் முன்னே கை விடும் பாதை

வறுமையில் கொண்டேன் நண்பர்களின் போதை
வறுமை தொடர்ந்தது நட்பு பிரிந்தது

நம்பிக்கை கொண்ட உறவுகளின் போதை
நம்பி மனம் உடைந்தது வாழ்வின் பாதை

வாழ்வில் இழந்தேன் அனைத்து பாதை
இன்னும் முடியவில்லை வலி தரும் போதை

மேலும்

கருத்துகள்

மேலே