G.Anto - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  G.Anto
இடம்:  Thoothukudi
பிறந்த தேதி :  15-Sep-1971
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  30-Jul-2012
பார்த்தவர்கள்:  113
புள்ளி:  54

என்னைப் பற்றி...

தமிழ்நாடு மின்வாரியத்தில் இளநிலை பொறியாளராக பணி புரிகின்றேன் .ஒரு மனைவியும் , இரண்டு மக்களும் என் தெய்வம் இயேசு எனக்கு தந்த ஈவுகள். கர்த்தருக்கே ஸ்தோத்திரம் என்றென்றைக்கும் உண்டாவதாக !ஆமென்.

என் படைப்புகள்
G.Anto செய்திகள்
G.Anto - G.Anto அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
31-Oct-2012 5:25 pm

ஓயாது மூச்சு வாங்க
அமைதியாய் உள்ளிருந்து நமக்கு
தொல்லை கொடுத்து
ஊரையெல்லாம் கூவி அழைப்பவன்!

மேலும்

G.Anto - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Apr-2014 7:22 pm

என்னத்தை கொண்டு வந்தோம் ?
நாம் கொண்டு செல்வதற்கு!
உள்ளத்தை பெற்று வந்தோம் ,
உயர் மனிதனாய் உலகில் வாழ்வதற்கே!
உருப்பட வழி நினையாது ,
உண்மையை மறந்து விட்டோம்!
சத்துருவின் சதியாலே
சத்திய பரனை புறம் தள்ளி விட்டோம் !
நம்
'அகம் ' அதில் வரவே
அன்புடன் இயேசு உலகில் வந்தார்!
அமைதலோடு பாடு சகித்தார் பாவிகள் முன்னே!
ஆவியனாவர் நம்மில் வர
வெற்றி சிறந்தார் சிலுவையிலே !
இன்றும் வாழ்கிறார் நமக்கென , நம்முடனே !
இயேசுவின் முகம் காண வருவாயோ?
என் ஜனமே!
என்னத்தை கொண்டு வந்தோம் ?
நாம் கொண்டு செல்வதற்கு!
இறைவன் இயேசுவின் இரட்சிப்போடு
இரக்கமுள்ள தேவனை நீ காண
இன்றே ஜெபித்திடு!

மேலும்

G.Anto - G.Anto அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Feb-2014 12:12 am

வானம் பார்த்த பூமியல
குடிக்கிற தண்ணி
எங்களுக்கே இல்லாம போச்சே!
விரிசல் விட்டு பெளந்து கிடக்கும்
நாதியத்த நிலத்தால
பசி, மயக்கம் வந்து போகும் நேரத்துல
இரை,தண்ணி தேடி
நீ மட்டும் இங்கு வந்தாயோ?
என்னோட ஆட்டுக்குட்டியே!
கைத்தடி ஊனி , நொண்டி நடந்து ,தேடி அலைஞ்சு
உன்ன பார்த்த பின்னே,
வந்த கால் வலி எல்லாம் பறந்து போக ,
அரவணைச்சு உன்னோட உக்கார்நதுப்புட்டேன்!
நம்ம நெலமை கண்டு ,
கொளுத்தும் வெயில் கூட
இனிமே ஒதுங்கிப்போகும்,
என்னோட ஆட்டுக்குட்டியே!
கத்தாத! கவலப்படாத!
காலம் வரும் ! காத்திருப்போம்!
நம் கண்ணீர் மாறும்! கவலையும் போகும்!
எல்லாம் மாயை! எல்லாம் மாயை!
இதுவும் கடந்

மேலும்

G.Anto - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Feb-2014 12:12 am

வானம் பார்த்த பூமியல
குடிக்கிற தண்ணி
எங்களுக்கே இல்லாம போச்சே!
விரிசல் விட்டு பெளந்து கிடக்கும்
நாதியத்த நிலத்தால
பசி, மயக்கம் வந்து போகும் நேரத்துல
இரை,தண்ணி தேடி
நீ மட்டும் இங்கு வந்தாயோ?
என்னோட ஆட்டுக்குட்டியே!
கைத்தடி ஊனி , நொண்டி நடந்து ,தேடி அலைஞ்சு
உன்ன பார்த்த பின்னே,
வந்த கால் வலி எல்லாம் பறந்து போக ,
அரவணைச்சு உன்னோட உக்கார்நதுப்புட்டேன்!
நம்ம நெலமை கண்டு ,
கொளுத்தும் வெயில் கூட
இனிமே ஒதுங்கிப்போகும்,
என்னோட ஆட்டுக்குட்டியே!
கத்தாத! கவலப்படாத!
காலம் வரும் ! காத்திருப்போம்!
நம் கண்ணீர் மாறும்! கவலையும் போகும்!
எல்லாம் மாயை! எல்லாம் மாயை!
இதுவும் கடந்

மேலும்

G.Anto - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Feb-2014 12:19 am

மார்கழிப் பனியில் நனைந்த மலர் போல்
மலரோடு சேர்ந்து
என் நினைவுகளும் மலர்கின்றதே!
அன்று
அரும்பு மீசை கூட வாராத வயதெனக்கு !
அன்போடு அரவணைக்கும் தாய் போல
அவள் இருக்க ,
அவள் மடியில் சாய்ந்திருப்பேன் பண்போடு!
என் சிரிப்பழகை மீண்டும் காண ,
தானும் சிரித்துக்கொண்டே
எனையும் சிரிக்கச்செய்வாள்!
இருபத்தேழு வருடம் முன் நடந்த இவை
இன்றும் சிதையாமல்
என் இதயத்தில் கிடக்கின்றதே!
புதையலை தேடி தோண்டுவது போல்
என்
இதயத்தில் புகுந்து தேடிப்பார்க்கின்றேன்!
நான் மலரோடு கரம் பிடித்து
கடந்து சென்ற பாதைதனை!
என் மனதில் நீங்கா இடம் பிடித்த அவள்
எங்கோ வாழ்கிறாள் ,எனை பிரிந்து!
நிற்க,

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே