ஷிவஹணி - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : ஷிவஹணி |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 17-Feb-2017 |
பார்த்தவர்கள் | : 13 |
புள்ளி | : 0 |
என்னைப் பற்றி...
பெண்ணிய புரிதலை தேடி..... ஒரு பெண்ணாய் என் பயணம்
என் படைப்புகள்
ஷிவஹணி செய்திகள்
என்னை மொழியாய் உள்வாங்கி உரு எனும் கருவாக்கி கவிதையாய் பெற்றெடுத்த என் அம்மாவுக்கு சமர்ப்பணம்!
அம்மா
அணுவைக் கருவாக்கி அள்ளி எடுத்தவளே...!
அரவம் இல்லாத கருவுடன் பேசிக் களித்தவளே..!
நான் செய்த பிள்ளைக் கூத்துக்களுக்கு மாபெரும் ரசிகையே...!
நான் சிரித்தால் சிரித்து, அழுதால் அழும் என் பிம்பமே..!
என் பூப்படைவில் உள்ளம் பூரித்தவளே...!
அம்மா என்ற மூன்றெழுத்தில் மயங்கித் திளைத்தவளே..!
மாற்று இதயம் கூட வந்து விட்டது
இந்த கலியுலகில்
எந்நூற்றாண்டிலும் கிடைத்திடாத
தன்னிகரற்ற தாயே...!
பிரார்த்திக்கிறேன்,
அந்த பிரம்மனிடம்,
உன் கடன் தீர்க்க,
அடுத்த பிறவியிலாவது
உன் தாயாக நான்...!
கருத்துகள்