M.Bharathinathan - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : M.Bharathinathan |
இடம் | : New Zeland |
பிறந்த தேதி | : 06-Jul-1966 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 07-Oct-2012 |
பார்த்தவர்கள் | : 104 |
புள்ளி | : 47 |
எண்ணத்தை எழுதுகிறேன்...
என் பேனாவின் மைத்துளிகள் காகிதத்தில் சிதறிய நேரம், மண்ணில் மழைத்துளிகளாய் என்னில் வார்த்தைகள் இளமையிலிருந்தே கவித்துளியாகிவிட்டன. தழுவிய கற்பனைகளை நழுவவிடாமல் நனைந்து கொண்ட என் இதய அறைக்குள் ஏற்பட்ட சலனப் பூக்களின் சங்கீதத் தொகுப்பே இந்த படைப்பு.
இன்று எனது நீண்ட நாள் ஆசையை நிறைவு செய்ய வரும் அந்த இனிய
“கற்பனைகளோ ஒரு அற்புதம்
கண்ணில் காண்பவை சித்திரம்
விண்ணில் காண்பவை விசித்திரம்
என்னில் காண்பவை கவித்திறம் - என்
அன்னைத் தமிழுக்கு தோத்திரம்”
அடியேன் கவி ஒன்றை அவள் காலடியில் படைத்திட தகுதியாக்கினாள். எனவே தலைதாழ்த்தி வணங்குகிறேன். நான் ஒரு எழுத்தாளன், குறிப்பாக கவிஞன் பாரத சமுதாயத்தின் கிழிசல்களை அரைகுறையாகத் தைக்க நான் அவசரப்பட்டதில்லை. ஆனால் நாளை முழுமையாக தைக்க முயற்சிக்கிறேன் என் எழுத்தூசிகளைக் கொண்டு இன்று.
சிறு வயதிலிருந்தே கவிதை எழுதும் ஆர்வம் என்னுள் ஏற்பட்டு எட்டாம் வகுப்பிலேயே கவிதை எழுத ஆரம்பித்தேன். அதைத் தொடர்ந்து திண்டிவனம் புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பில் திண்டிவனம் கல்வி மாவட்ட அளவில் நடைப்பெற்ற கவிதைப் போட்டியில் முதல் இடத்தைப் பெற்றேன். அதைத்தொடர்ந்து என் கவி ஆற்றல் கல்லூரி படிப்பிலும் அயல் நாட்டிலும் மேலும் வளம்பெறச் செய்தேன்.
எனது கவிதைவரிகள் வாசிக்கப் படவேண்டியவை அல்லாமல், அது நம் ஒவ்வொரு உயிரிலும் சுவாசிக்கப் படவேண்டியவையாக மாறி, இந்திய இதயங்களில் எழுத வேண்டிய இனிய வரிகளாக வேண்டும். அந்த உயர்ந்த சிந்தனைகளை ஒருமுகப்படுத்தி, நாம் என்றும் ஏற்றம் பெறவேண்டும் வாழ்வில் மாற்றம் காண வேண்டும்.
என்றும் உங்கள் அன்புடன்
டாக்டர்.ம.பாரதிநாதன்...