மசுகு - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  மசுகு
இடம்:  கோயமுத்தூர், தமிழ்நாடு
பிறந்த தேதி :  01-Jan-1981
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  24-Sep-2021
பார்த்தவர்கள்:  30
புள்ளி:  17

என்னைப் பற்றி...

'நம் வாழ்க்கையை சிறப்பாக அமைக்க, நம்மால் மட்டுமே முடியும்' என்னும் ஒரு வரியை அனைவருக்கும் உணர்த்தி, வாழ்வை செம்மைப்படுத்த வேண்டும் என்ற இலட்சியத்தோடு பேசவும் எழுதவும் தொடங்கியுள்ளவன். எனது அடையாளம், உங்களின் வெற்றியும் மகிழ்ச்சியும் மட்டுமே !!

என் படைப்புகள்
மசுகு செய்திகள்
மசுகு - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Oct-2021 9:24 pm

[ம.சு.கு]வின் : எல்லாம் கண்ணோட்டமே !! [It’s all in Perception]

சிறு குழந்தைகள் மஞ்சள் கண்ணாடி அணிந்து கொண்டு உலகமே மஞ்சளாய் தெரிகிறது என்று கூறுவர். என்னதான் விலையுயர்ந்த கருப்பு நிற கண்ணாடி (கூளிங் கிளாஸ்) அணிந்தாலும், எதிரில் உள்ள எல்லாப் பொருளும் சற்றே மங்களாகவும், கருப்பாகவும் தான் தெரியும். நாம் எதைக் கொண்டு பார்க்க முற்படுகிறோமோ, நம்மைச் சுற்றிய இவ்வுலகமும் அதுவாகவே நமக்கு தெரியும்.


இருள் பயம்:


நம் அன்றாட வாழ்க்கைக்கு வருவோம். இன்னும் சில பெரியவர்களுக்கு கூட, இருட்டைக் கண்டால் அதீத பயம் இருக்கிறது. தனியாக இருளில் செல்ல மாட்டார்கள். குழந்தை பருவத்தில் இருந்தே இந்த இருளின் மீதான பயம

மேலும்

மசுகு - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Oct-2021 10:10 pm

[ம.சு.கு]வின் : ஆட்டுமந்தைகளா நாம் ? [HERD MENTALITY]


ஒரு கலைநிகழ்ச்சிக்கு செல்கின்றோம். அங்கு கல்யாணி ராகத்தில் நல்ல கீர்த்தனை ஒன்று பாடப்படுகிறது. நமக்கோ சங்கீத ஞானம் சுத்தமாய் கிடையாது. அந்த கீர்த்தனையும் தெலுங்கில் இருந்தபடியால் ஒன்றும் புரியவில்லை. ஆனால் முடிவில் கை தட்டுகிறோம்! ஏனென்றால் எல்லோரும் தட்டுகிறார்கள்!!


எண்ணிம நாணயச் (Cryptocurrency) சந்தை


கடந்த ஆண்டு சந்தையில் எண்ணிம நாணயம் [BITCOIN] என்ற ஒன்று புதிதாய் பெரும் வரவேற்பை பெற்றது. எல்லோரும் இந்த எண்ணிம நாணயத்தில் முதலீடு செய்கிறார்கள், அதுதான் இனி எதிர்காலம் என்று எண்ணி பலரும் அதை பின்தொடர, அதன் விலை பல லட்சங்களை

மேலும்

மசுகு - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Oct-2021 10:08 pm

[ம.சு.கு]வின் : நம்பிக்கை (எதி) பயம் [Confidence Vs Fear]

சாதாரணமாக நாம் மனத்தாலும், எண்ணத்தாலும் நமக்கு நாமே வலிமை உடையவர்களாக உணர்வது மனித இயல்பு. அதேசமயம், சில-பல தருணங்களில், வாழ்க்கையின் நிகழ்வுகளில் சிக்குண்டு மனம் தளர்வதும் அவ்வப்போது நிகழ்ந்த வண்ணமே இருக்கின்றது.


சில இழப்புகள் நம்மை தளர்வடையச் செய்யலாம் !

சில ஏமாற்றங்கள் நம்மை தளர்வடையச் செய்யலாம் !

சில துரோகங்கள் நம்மை தளர்வடையச் செய்யலாம்!

சில தவறுகள் நம்மை தளர்வடையச் செய்யலாம்!


எதுவானாலும், தற்காலிகமான தளர்வுகள் மனித வாழ்க்கையில் இயல்பானவைகளே. ஆனால் இந்தத் தற்காலிக தளர்வில் சிக்குண்டு வாழ்க்கையின் மீது உள்ளூர ஒ

மேலும்

மசுகு - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Oct-2021 10:06 pm

[ம.சு.கு]வின் : சுற்றுப்புறமும் – நம் பழக்கவழக்கமும் (Environment Vs Our Daily Habits)


ஒருமுறை மிகவும் பருமணாக இருக்கும் என் நண்பர் ஒருவருடன் உறையாடிக் கொண்டுருக்கையில், அவர் உடல் பருமண் குறித்து பேசி மிகவும் மனவருத்தம் கொண்டார். அவர் தினமும் குறைவாகவே உண்பதாகவும் (காலை 3 இட்லி, மதியம் & இரவு 3 சப்பாத்தி சாப்பிட்டாலும்) தனது உடல் எடை குறைவதில்லை என்று வருந்தினார். இரண்டு-மூன்று மாதங்களாக உண்பதை குறைத்தும் எடையில் சின்ன மாற்றமும் ஏற்படவில்லை என்று குமுறினார். இது ஒருபுறம் இருக்க, இன்னொரு நண்பரோ, தனது குழந்தைகள் எப்போதும் தொலைக்காட்சி பார்த்தே நேரம் கழிப்பதாக குறைகூறினார்.


இவை தவிர்த்த

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே