Poompaavai - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Poompaavai
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  02-Feb-2017
பார்த்தவர்கள்:  121
புள்ளி:  3

என் படைப்புகள்
Poompaavai செய்திகள்
Poompaavai - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Feb-2017 12:53 am

கண்ணாமூச்சி விளையாடிய
கண்ணம்மா!
காமுகனிடம் சிக்கிக்கொண்டாயே!
கடவுளே!
கருணையே நீ தான் என்றால்
காக்கும் தொழில் மறந்ததேன்?
கலங்கமில்லா கயல்விழியாளை
கயவன் கலைந்தெறிந்த
காரணம் என்று எதை சொல்வாய்?

பாசமும் வேஷமும் அறியாத
பச்சைக்கிளியே!
பருந்துக்கு இரையாகி போனாயே!
பரந்தாமா!
பகைவன் இவன் என புரியாமல்
பட்டாம்பூச்சி ஒன்று படபடத்தபோது
பார்கடலில் சயனித்திருந்தாயோ?
பாவி ஒருவன் கசக்கி எறிய
பட்டுப்பூவை படைத்ததும் ஏன்?

தூணிலும் துரும்பிலும் இருப்பின்
துள்ளி திரிந்த மான்
துன்புற்று துடித்த போது
தூங்கிப்போனாயோ?
தூப அலங்காரம் நிறைவில்லையா
துதி பாடியது போதவில்லையா?
துலாபாரக் கண்ணா!
தும

மேலும்

Poompaavai - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Feb-2017 9:47 am

ஆர்ப்பரிக்கும் கூட்டம்
அடங்காத காளை
அசராத வீரன்
அலறும் ஒலிப்பெருக்கி
அழைப்பில்லாமல் வந்த அரசியல்வாதிகள்
அத்துமீறாத காவல்துறை
அண்டான், அலமாரி, தங்கக்காசு
ஆடம்பரமில்லாமல்
அரங்கேறியது
அறப்போராட்டம் மீட்டெடுத்த
அலங்காநல்லூர் ஐல்லிக்கட்டு!
ஆசை நிறைவேறியதா தமிழா?

மேலும்

Poompaavai - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Feb-2017 5:18 pm

கேட்டதுண்டு
பேசியதில்லை
பார்த்ததுண்டு
பழகியதில்லை
வியந்ததுண்டு
பொறாமை இல்லை
அன்புண்டு
அளவில்லை

காதலித்தேன்
உன் காதல் வரிகளை
ரசித்தேன்
அதன் நடையழகை
பாடினேன்
நீ பாடாத உன் பாடலை
பிடித்தேன்
நீ விற்ற
பட்டாம்பூச்சிகளை

மகிழ்ந்தேன்
தமிழில் உன் வளமை கண்டு
நெகிழ்ந்தேன்
நீ பயணப்பட்ட பாதை கண்டு
கலங்கினேன்
கண்ணீர் அஞ்சலியில் உன் முகம் கண்டு
அரற்றினேன்
இரக்கம் இல்லா இயற்கை கண்டு

முத்துக்குமரா!
காகிதத்தில் நீ எழுதிய காவியம்
காற்றில் கலந்துவிட்டது
அவை அழியப்போவதில்லை
நீ சிறகடிக்கவிட்ட பட்டாம்பூச்சிகள் தொலையப்போவதில்லை
காலம்
அவற்றின் நிறத்தை மாற்றப்போவதில்லை
போய் வா கவி

மேலும்

கருத்துகள்

மேலே