இரா பிரமோத் முத்துராம் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  இரா பிரமோத் முத்துராம்
இடம்:  Madurai
பிறந்த தேதி :  31-Jul-2000
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  08-Mar-2022
பார்த்தவர்கள்:  10
புள்ளி:  0

என் படைப்புகள்
இரா பிரமோத் முத்துராம் செய்திகள்

பெண்ணே !
வான்வெளிக்குச் 
நீ சென்றால் 
வான் நிலவும் 
வாய்பிளந்து பார்க்குமடி....

சுவிட்  கடைக்கு 
நீ
சென்றால் 
சுவிட்களுக்கும்
எச்சில் ஊறுமடி....!

வெதுவெதுப்பான  நீரில் 
உன் கைப்பட்டால் 
அது பனிக்கட்டியாக 
உறையுமடி ....

கசப்பானது 
உன் இதழ் பட்டாலும்
கற்கண்டாய் இனிக்குமடி...!

பூங்காவிற்குள் 
நீ புகுந்தால்
பூக்களும் 
உன் அழகில் மயங்குமடி....!

புயல் காற்று
உன்னை தீண்டினால் 
பூங்காற்றாய் மாறி வீசும்படி... |

கடற்கரைக்கு 
நீ சென்றால் 
அலைகளும் 
உனக்கு பாதபூஜை 
செய்யுமடி......

வான் மழையில் 
நீ நனைந்தால் 
மழைக்கும் 
குளிர் எடுக்குமடி .....!

பனித்துளி மீது 
உன் பார்வை விழுந்தால் 
அதற்கும் வேற்குமடி....
தென்றல் 
உன்னை தீண்டினால் 
அதற்கும்
காய்ச்சல் வருமடி..

சராசரி மனிதன் 
நான் என்ன செய்வேன்..
எப்படி சொல்வேன்????

            இரா. பிரமோத்  முத்துராம் 

மேலும்

என் தாய் மொழி 
தமிழின் இனிமையை 
உன் வாய்மொழியில் தானடி கண்டேன்....

ஆயக்கலை 
அறுபத்து நான்கையும் 
உன்னில்  கண்டு
திகைத்து நின்றேன்....

ஈர மண்ணில் விழுந்த 
விதையாய் 
என் இளமை மனதில் 
விழுந்தாயே...!

ஆழ்கடலில் எழும்
ராட்சஸ அலையாய் 
என் நினைவினிலே
எழுந்தாயே....!

கவிதையாய் 
உன்னை எழுதினால் 
எழுதுகோலுக்கும் 
உன்மேல் 
காதல் வருமடி.....

சித்திரமாய் 
உன்னை தீட்டினால் 
தூரிகைக்கும் உன்மேல்
ஏக்கம் தோன்றுமடி....

பாலைவனத்தில் 
உன்பாதம் பட்டாலும் 
அது 
சோலைவனமாக மாறுமடி....

பட்ட மரத்தை 
நீ தொட்டாலும் 
அது சட்டென்று 
துளிர்க்குமடி...

 உன்னை்க் 
கண்ட நாள் முதல் 
என்னைக் காணவில்லையடி..

நீ என்னை
நேசிக்கும்வரை
இவ்வுலகம்
 எனக்கு இல்லையடி.....!!

              - இரா. பிரமோத் முத்துராம்

மேலும்

பெண்ணே! 
உன்னை 
கவிதையாய் எழுதினால்
காகிதமும் காதலிக்குமடி..|!

உன்னை 
சிலையாய் செதுக்கினால் 
கல்லுக்கும்
உணர்வு வருமடி...!

உன்னை 
தீண்டிச் சென்றால்
தென்றலுக்கும் 
சுகம் பிறக்குமடி...!

உன் பாதம்பட்டால் 
மண்ணும்
மணம் வீசுமடி.....!

உன் விரல்கள்
தொட்டால்
சித்திரமும் சிலிர்க்குமடி....!

நீ 
தலையில் சூடினால்
மல்லிகைப்பூவுக்கும்
மயக்கம் வருமடி...

நீ குடத்தை
இடையில் சுமந்தால்
அதுவும்
வெட்கத்தில் நழுவுமடி...!

நீ 
தலை சாய்த்து 
படுத்தால் 
தலையணையும்
சுகம் பெறுமடி....

நீ அமர்ந்து  
அலங்கரித்தால் 
கண்ணாடியும்
உன்னை ரசிக்குமடி....

உன் விரல்களால் 
தீபமேற்றினால் 
தீக்கும் குளிருமடி...

 நீ குடித்தால் 
தண்ணீருக்கும் 
தாகம் எடுக்குமடி...

உன்மேல் விழுந்தால்
வெயிலுக்கும்
வேர்க்குமடி......

நீ நனைந்தால் 
மழைக்கும் 
சலதோஷம் பிடிக்குமடி

அப்படியிருக்க....

ஓரக்கண்ணால் 
என்னை 
பார்த்துச் சென்றாயே....!
நான்
என்னாகுவோனோ???

              - இரா. பிரமோத் முத்துராம்

மேலும்

பூ என்றால் 
காம்போடு இருக்கும்...
இவள் என்ன 
கை கால்களோடு 
இருக்கிறாளே....! 

கவிதை என்றால் 
நோட்டுப் புத்தகத்தில் 
இருக்கும் 
இவள் என்ன? 
சுடிதாரில்
இருக்கிறாளே...!

நிலவு என்றால் 
இரவில் மட்டும் தெரியும் 
இவள் என்ன 
பகலிலும் தெரிகிறாளே....!!

தென்றல் என்றால் 
மாலை நேரத்தில் வரும் 
இவள் என்ன 
மதிய நேரத்திலும் 
வருகிறாளே....!!!

வானவில் என்றால் 
மழைக்காலத்தில் தோன்றும் 
இவள் என்ன 
வெயில் காலத்திலும் 
தோன்றுகிறாளே...!!

சிலை என்றால் 
ஆடாமல் இருக்கும்
இருக்கும் 
இவள் என்ன 
அங்கும் இங்கும் 
நடக்கின்றளே....!!!

சித்திரம் என்றால் 
உயிரற்று இருக்கும்
இவள் என்ன?
உயிரோடு இருக்கிறாளே..!

புரியாத புதிர்களில் 
இதுவும் ஒன்று 
புரிந்து 
கொள்வதுதான் என்று...?

              - இரா. பிரமோத் முத்துராம்

மேலும்

இரா பிரமோத் முத்துராம் - இரா பிரமோத் முத்துராம் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
08-Mar-2022 7:47 am

கயல்விழி 

மீன் விழியால் மிதிலை 
மகளினும் பேரழகாம்
வாழை இடையழகி வாழும் தேவதை நீ

சாலை நடைவழியில்
சந்தித்த பகல் ஒளியாள்

கயல் கொண்ட கண்விழியாள்
கடல் தன்னை கண்கொண்டாள் 

மருளும் மான் போல
மயக்கும் விழி அழகாய் 

இருள் நீக்கி என் வாழ்வில் 
பொருள் தந்த பேரழகே 

ஒரு சொல் தந்து போவாயோ 
உன் வில் போன்ற கண்ணாலே

               - இரா.பிரமோத் முத்துராம் 

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே