என் தாய் மொழி தமிழின் இனிமையை உன் வாய்மொழியில்...
என் தாய் மொழி
தமிழின் இனிமையை
உன் வாய்மொழியில் தானடி கண்டேன்....
ஆயக்கலை
அறுபத்து நான்கையும்
உன்னில் கண்டு
திகைத்து நின்றேன்....
ஈர மண்ணில் விழுந்த
விதையாய்
என் இளமை மனதில்
விழுந்தாயே...!
ஆழ்கடலில் எழும்
ராட்சஸ அலையாய்
என் நினைவினிலே
எழுந்தாயே....!
கவிதையாய்
உன்னை எழுதினால்
எழுதுகோலுக்கும்
உன்மேல்
காதல் வருமடி.....
சித்திரமாய்
உன்னை தீட்டினால்
தூரிகைக்கும் உன்மேல்
ஏக்கம் தோன்றுமடி....
பாலைவனத்தில்
உன்பாதம் பட்டாலும்
அது
சோலைவனமாக மாறுமடி....
பட்ட மரத்தை
நீ தொட்டாலும்
அது சட்டென்று
துளிர்க்குமடி...
உன்னை்க்
கண்ட நாள் முதல்
என்னைக் காணவில்லையடி..
நீ என்னை
நேசிக்கும்வரை
இவ்வுலகம்
எனக்கு இல்லையடி.....!!
- இரா. பிரமோத் முத்துராம்