SudharshiniK - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/user/user_default_image.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : SudharshiniK |
இடம் | : Bogawantalawa |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 30-May-2020 |
பார்த்தவர்கள் | : 21 |
புள்ளி | : 0 |
எனக்கானவன்!!!
இப்போது
நீ என்னவனில்லை!!!!
அப்படியா????
எப்போதுமே நீ மட்டுமே என்னவன்.....
எப்போதோ
நாம் இழைத்த தவறுகளில்
நம் வாழ்க்கையை
கொன்று புதைத்து விட்டோம்...
காதலை அல்ல....
காலசக்கரத்தில் சிக்கி
மீட்சி பெற முடியாதபடி
நான் வேறொரு தேசம் வந்தேன்
ஆனாலும், - நீ
உன் சக தோழனுடன்
நான் நகரும் வாகனத்தை வெறித்தபடியே நின்றிருந்தாய்....
அந்த விநாடியிலிருந்துதான்
உனை அதீத ஆழமாய் காதலிக்க ஆரம்பித்தேன்....
அதுவரை
உனை இழந்து விட்டதாய்
ஓர் உணர்வேயில்லை எனக்குள்....
தூர தேசத்தில் நானிங்கு...
ஆனாலும் நீ குறித்த
உன் மீதான காதல் - என்
சிந்தனைகளில் மிக
நெருக்கமாய்.....
உடலோடு மனதை இணைத்து
இயல்பாய் வாழ்வை இன்னொருவருடன் பகிர முடியவில்லை....
தீரா காதலை தவிர வேறொன்றுமில்லாதபடி
வாழ்ந்த நம் நாட்கள்.....
முதல் காதல் மிக புனிதமானது...
அதுவும் நம் காதலை போலில்லை....
காதல் என்பதே கட்டியணைக்கவோ,
முத்தம் பகிரவோ,
ஒன்றாய் ஊர் சுற்றவோ தான் என்பதை கடந்து,
நாம் ஒன்றாய் ஒரேயொரு நாள் பயணித்த முச்சக்கரவண்டி....
அதிலும் கூட நீ இடது மூலையில்,
நான் வலது மூலையில் - நமக்கிடையே நம் சக தோழி.....
நீ
"கதைக்கனுமாம்"
என் தோழி சொன்னாள்.....
அவ்வளவே!!!!
கொயிளூரான் கோவிலின்
நீண்ட நெடுஞ்சாலையில்,
ஒரு முனையில் நீ,
மறு முனையில் நான்,
நம்மிடையே
நீண்ட மௌனம்....
ஒரு மீட்டர் இடைவெளி
உனக்கும், எனக்குமானது....
கடைசிவரை நீ என்னுடனோ,
நான் உன்னுடனோ,
எதுவுமே பேசவில்லை......
கோவிலில் உன் அருகில்
நின்றவாறே,
நீ கண்களை இறுக மூடி கொண்டு
பிரார்த்திப்பதாய் நானும்,
நான் கண்களை திறக்க மாட்டேன்
என யூகித்தவாறே நீயும் - நிமிர்ந்து
நம் இருவர் கண்களும்
முதன்முதலாய்,
ஒன்றாய் சங்கமித்த
படபடத்து போன
நிமிடங்கள்....
தெரு விழா கோலம் பூண்டிருந்த
ஓர் அடைமழை நாளில்
உனது சகோதரியோடு - எனை
உனது வீட்டிற்கு
அனுப்பி வைத்தாய்....
"வலது காலை வைத்து
உள்ள வாங்க அண்ணி"
உனது தங்கையின்
வார்த்தைகளின் பின் - உன்
அம்மாவின் அழைப்பு......
ஆடையின் ஈர பிசுப்புகளை
அரவணைத்து துடைத்துவிட்ட
அம்மா....
கால்களை மோப்பம் பிடித்தவாறே
உன் வீட்டின் குட்டி நாய்....
நீ வீட்டில் இல்லை,
ஆனாலும்
உன் கோடிட்ட நீல நிற சட்டை
கதவின் பின்னால்
தொங்கிக்கிடந்தது....
மெதுவாய்,
சுற்றும் முற்றும்
கண்களை சுழற்றி விட்டு
உள் நுழைந்து,
உன் சட்டை கைகளில்
என் கை நுழைக்கையில்,
கையில் தேநீருடன் "அண்ணி டீ குடிங்க"
அழைத்தவாறே
வந்து நின்றாள் தங்கை....
அடை மழை நாளொன்றில்
மொத்தமாய் பயத்தில்
வியர்வை நனைத்த தருணமது.....
ஒருவாறாக விடைபெற்றும்
இன்று வரை தீராத உன்
சட்டையின் விபூதி வாசனை
இன்றும் என் நாசிகளில்......
ஓர் நாளும் வார்த்தைகளால்
உன் காதலை நீ
சொல்லியதே இல்லை!!!
உனது அன்பை சுமந்து வரும்
நீ வடித்த கடிதங்களை,
தண்ணீர் வாங்கும் சாக்கில்
என் கைகளில் திணித்து விட்டு
செல்வான் உன் தோழன்.....
அதனை கொப்பியின்
கவருள்ளே மறைத்து வைத்து
கடிதம் வாசிக்கவே
விடிய விடிய தூக்கம் தொலைத்த நாட்கள் இன்றும் இனிக்கிறது....
நாளிதழ்களில் வரும்
ஜோடி கதாநாயகர்களின்
முகங்களில் - நீ எழுதும்
உனதும்
எனதுமான பெயர் சொல்லும்,
உன் காதலை.....
காலமும்,
சூழ்நிலைகளும்
நம்மை எங்கெங்கோ
பிய்த்து பிடுங்கி
வழியனுப்பி விட்டாலும்,
என் பெயரின் முதல் எழுத்தில்
இன்றும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறாய் நீ.....
நாம் ஒன்றாய் பயணித்த
தெரு - நீ கொடுத்த
பரிசு பொருள்,
நீ தந்த காதல் கடிதங்கள் அனைத்தும்
உனை நினைவுபடுத்தியவண்ணம்
பத்திரமாக இருக்கிறது இன்றும் என்னிடம்......
கண்ணீரில் நனைந்தபடி
பெருவெளியில் கதறி அழுதிருக்கிறேன் - பல பொழுதுகள்......
கட்டாயத்தால்
பல காயங்களுக்கு பின்
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
வாழ்தலே வாழ்க்கை என்பதாய்.....
உன் சாயலில் தான் எல்லாமே....
நீயாய் நினைத்தே
சில உறவுகளை
கடக்கிறேன்......
ஏகலழவனின் கற்றலை போல தான்
என் காதலும்....
உன் உடலோ, உயிரோ என் அருகிலில்லை - ஆனாலும்
உனது ஆன்மாவை
ஆயுள் கடந்தும் காதலிப்பேன்.....
எனது ஜென்மங்களை
காதலுக்கு காணிக்கையாக்குவேன்..
நமது தலைமுறை கடந்து
நமது குழந்தைகள் காலத்திலாவது
உனக்கான - என் நாட்குறிப்பை
நீ வாசிக்க நேரலாம்....
அப்போதும் உன் உயிரில் கலப்பேன்,
உன் விழி வழி நுழைந்து
இதயத்தை ஸ்பரிசிப்பேன்.....
தவறுகளையும்,
பிழைகளையும்,
வஞ்சத்தையும்,
தாண்டி
என் காதலை நீ உணர்ந்தால்
கண்டிப்பாக உன் விழி வழி எட்டிப்பார்க்கும் கண்ணீரிலும்
நம் காதல் வாழும்.....
இது உனக்காக நான் எழுதி முடித்த கடைசி வலியாகவும் இருக்கலாம்...
ஆனாலும்
இப்போதும்
என் உயிரின் காதல்
கண்கள் வழியே கண்ணீராய்.....!!!!!
எனக்கானவன்!!!
இப்போது
நீ என்னவனில்லை!!!!
அப்படியா????
எப்போதுமே நீ மட்டுமே என்னவன்.....
எப்போதோ
நாம் இழைத்த தவறுகளில்
நம் வாழ்க்கையை
கொன்று புதைத்து விட்டோம்...
காதலை அல்ல....
காலசக்கரத்தில் சிக்கி
மீட்சி பெற முடியாதபடி
நான் வேறொரு தேசம் வந்தேன்
ஆனாலும், - நீ
உன் சக தோழனுடன்
நான் நகரும் வாகனத்தை வெறித்தபடியே நின்றிருந்தாய்....
அந்த விநாடியிலிருந்துதான்
உனை அதீத ஆழமாய் காதலிக்க ஆரம்பித்தேன்....
அதுவரை
உனை இழந்து விட்டதாய்
ஓர் உணர்வேயில்லை எனக்குள்....
தூர தேசத்தில் நானிங்கு...
ஆனாலும் நீ குறித்த
உன் மீதான காதல் - என்
சிந்தனைகளில் மிக
நெருக்கமாய்.....
உடலோடு மனதை இணைத்து
இயல்பாய் வாழ்வை இன்னொருவருடன் பகிர முடியவில்லை....
தீரா காதலை தவிர வேறொன்றுமில்லாதபடி
வாழ்ந்த நம் நாட்கள்.....
முதல் காதல் மிக புனிதமானது...
அதுவும் நம் காதலை போலில்லை....
காதல் என்பதே கட்டியணைக்கவோ,
முத்தம் பகிரவோ,
ஒன்றாய் ஊர் சுற்றவோ தான் என்பதை கடந்து,
நாம் ஒன்றாய் ஒரேயொரு நாள் பயணித்த முச்சக்கரவண்டி....
அதிலும் கூட நீ இடது மூலையில்,
நான் வலது மூலையில் - நமக்கிடையே நம் சக தோழி.....
நீ
"கதைக்கனுமாம்"
என் தோழி சொன்னாள்.....
அவ்வளவே!!!!
கொயிளூரான் கோவிலின்
நீண்ட நெடுஞ்சாலையில்,
ஒரு முனையில் நீ,
மறு முனையில் நான்,
நம்மிடையே
நீண்ட மௌனம்....
ஒரு மீட்டர் இடைவெளி
உனக்கும், எனக்குமானது....
கடைசிவரை நீ என்னுடனோ,
நான் உன்னுடனோ,
எதுவுமே பேசவில்லை......
கோவிலில் உன் அருகில்
நின்றவாறே,
நீ கண்களை இறுக மூடி கொண்டு
பிரார்த்திப்பதாய் நானும்,
நான் கண்களை திறக்க மாட்டேன்
என யூகித்தவாறே நீயும் - நிமிர்ந்து
நம் இருவர் கண்களும்
முதன்முதலாய்,
ஒன்றாய் சங்கமித்த
படபடத்து போன
நிமிடங்கள்....
தெரு விழா கோலம் பூண்டிருந்த
ஓர் அடைமழை நாளில்
உனது சகோதரியோடு - எனை
உனது வீட்டிற்கு
அனுப்பி வைத்தாய்....
"வலது காலை வைத்து
உள்ள வாங்க அண்ணி"
உனது தங்கையின்
வார்த்தைகளின் பின் - உன்
அம்மாவின் அழைப்பு......
ஆடையின் ஈர பிசுப்புகளை
அரவணைத்து துடைத்துவிட்ட
அம்மா....
கால்களை மோப்பம் பிடித்தவாறே
உன் வீட்டின் குட்டி நாய்....
நீ வீட்டில் இல்லை,
ஆனாலும்
உன் கோடிட்ட நீல நிற சட்டை
கதவின் பின்னால்
தொங்கிக்கிடந்தது....
மெதுவாய்,
சுற்றும் முற்றும்
கண்களை சுழற்றி விட்டு
உள் நுழைந்து,
உன் சட்டை கைகளில்
என் கை நுழைக்கையில்,
கையில் தேநீருடன் "அண்ணி டீ குடிங்க"
அழைத்தவாறே
வந்து நின்றாள் தங்கை....
அடை மழை நாளொன்றில்
மொத்தமாய் பயத்தில்
வியர்வை நனைத்த தருணமது.....
ஒருவாறாக விடைபெற்றும்
இன்று வரை தீராத உன்
சட்டையின் விபூதி வாசனை
இன்றும் என் நாசிகளில்......
ஓர் நாளும் வார்த்தைகளால்
உன் காதலை நீ
சொல்லியதே இல்லை!!!
உனது அன்பை சுமந்து வரும்
நீ வடித்த கடிதங்களை,
தண்ணீர் வாங்கும் சாக்கில்
என் கைகளில் திணித்து விட்டு
செல்வான் உன் தோழன்.....
அதனை கொப்பியின்
கவருள்ளே மறைத்து வைத்து
கடிதம் வாசிக்கவே
விடிய விடிய தூக்கம் தொலைத்த நாட்கள் இன்றும் இனிக்கிறது....
நாளிதழ்களில் வரும்
ஜோடி கதாநாயகர்களின்
முகங்களில் - நீ எழுதும்
உனதும்
எனதுமான பெயர் சொல்லும்,
உன் காதலை.....
காலமும்,
சூழ்நிலைகளும்
நம்மை எங்கெங்கோ
பிய்த்து பிடுங்கி
வழியனுப்பி விட்டாலும்,
என் பெயரின் முதல் எழுத்தில்
இன்றும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறாய் நீ.....
நாம் ஒன்றாய் பயணித்த
தெரு - நீ கொடுத்த
பரிசு பொருள்,
நீ தந்த காதல் கடிதங்கள் அனைத்தும்
உனை நினைவுபடுத்தியவண்ணம்
பத்திரமாக இருக்கிறது இன்றும் என்னிடம்......
கண்ணீரில் நனைந்தபடி
பெருவெளியில் கதறி அழுதிருக்கிறேன் - பல பொழுதுகள்......
கட்டாயத்தால்
பல காயங்களுக்கு பின்
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
வாழ்தலே வாழ்க்கை என்பதாய்.....
உன் சாயலில் தான் எல்லாமே....
நீயாய் நினைத்தே
சில உறவுகளை
கடக்கிறேன்......
ஏகலழவனின் கற்றலை போல தான்
என் காதலும்....
உன் உடலோ, உயிரோ என் அருகிலில்லை - ஆனாலும்
உனது ஆன்மாவை
ஆயுள் கடந்தும் காதலிப்பேன்.....
எனது ஜென்மங்களை
காதலுக்கு காணிக்கையாக்குவேன்..
நமது தலைமுறை கடந்து
நமது குழந்தைகள் காலத்திலாவது
உனக்கான - என் நாட்குறிப்பை
நீ வாசிக்க நேரலாம்....
அப்போதும் உன் உயிரில் கலப்பேன்,
உன் விழி வழி நுழைந்து
இதயத்தை ஸ்பரிசிப்பேன்.....
தவறுகளையும்,
பிழைகளையும்,
வஞ்சத்தையும்,
தாண்டி
என் காதலை நீ உணர்ந்தால்
கண்டிப்பாக உன் விழி வழி எட்டிப்பார்க்கும் கண்ணீரிலும்
நம் காதல் வாழும்.....
இது உனக்காக நான் எழுதி முடித்த கடைசி வலியாகவும் இருக்கலாம்...
ஆனாலும்
இப்போதும்
என் உயிரின் காதல்
கண்கள் வழியே கண்ணீராய்.....!!!!!