தி மு நாகராஜன் - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  தி மு நாகராஜன்
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  14-Sep-1942
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  31-Jul-2021
பார்த்தவர்கள்:  0
புள்ளி:  0

என்னைப் பற்றி...

1963 வணிக இயலில் இளங்கலை பட்டத்தில் முதல் வகுப்பு. பல்கலைக்கழகத்தில் முதலிடம். 1965 முதுகலைப் பட்டத்திலும் முதல் வகுப்பு. 1965 இந்திய மத்திய வங்கியில் இளநிலை அதிகாரியாக நேரடித் தேர்வில் வங்கிப் பணி ஆரம்பம்.
1970 இந்திய தொழில் வளர்ச்சி வங்கியில் இணைந்து, நாலெட்டு ஆண்டுகள் பதவியில் உயர்ந்து, உயர்ந்து நாட்டின் தொழில் முன்னேற்ற பணியில் பங்கேற்பு..

இடையில் ஈராண்டுகள் நைஜீரியா நாட்டில் நைஜீரியன் வணிக தொழில் வங்கியில்
உலக வங்கி சார்பாக ஆலோசகர் பதவி.

2002 இந்திய தொழில் வளர்ச்சி வங்கியின் துணை மேலாண்மை இயக்குனராக பணி ஓய்வு.

வங்கிப்பணி ஓய்வைத் தொடர்ந்து இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்தில்
பங்கு வர்த்தக ஒழுங்கமைப்புப் பணியில் முழுநேர நிர்வாகக்குழு உறுப்பினர் பதவி.

பற்பல பொது, தனியார் நிறுவனங்களில் வெவ்வேறு காலங்களில் இயக்குனராக பொறுப்பு.

பணி நிமித்தம் பல வெளிநாடுகளுக்குப் பயணம்.

2004 முழுநேரப் பணியிலிருந்து ஓய்வு.

ஓய்வு பெற்ற பின்னர், எழுத்தார்வம் தலை தூக்கல்.

நூற்படைப்பு: நான்கு -இரண்டு ஆங்கிலத்தில், இரண்டு தமிழில்.
பட்டப்பெயர் : எழுத்துச் சிற்பி

தமிழிலும், ஆங்கிலத்திலும் கதை, கட்டுரை, கவிதை
எழுதும் பணி தொடர்கிறது!

அனுபவத்தில் விளையும் எழுத்தில்
யதார்த்தம், இலக்கியம், ஆன்மீகம், நடுநிலை அரசியல்
எல்லாம் காணலாம்!
சுவையில் நகைச்சுவையும் உண்டு!
திமுநா.

என் படைப்புகள்
கருத்துகள்

மேலே