இரண்டாம் ஆண்டு பொங்கல்விழா கவிதை போட்டி - நிலா சூரியன்

பொங்கல் திருவிழா கவிதை போட்டி
===============================

தோழமை நெஞ்சங்களே வணக்கம்...!

2012 ஆம் வருடம் புரட்சியாளர் சே குவேர பிறந்த தினத்தை முன்னிட்டு நமது தளத்தில் கவிதைபோட்டி போட்டி நடத்தி சிறப்பான படைப்பாளிகள் பலருக்கும் பண பரிசுகள் வழங்கி, அவர்களை கௌரவித்து மகிழ்ந்தோம்.

அதன் பிறகு 2013 கடந்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் திருவிழா கவிதை போட்டி நடத்தி, சிறப்பான படைப்பாளிகளை கௌரவித்து பரிசும் பட்டயமும் வழங்கினோம்.

அந்த வகையில் இது இரண்டாம் ஆண்டு பொங்கல் திருவிழா கவிதை போட்டிக்கான அறிவிப்பு.

அறிவிப்பு;

12 கோடி மக்கள் தொகையோடு உலகெங்கும் பறந்து விரிந்து கிடக்குற நமது தமிழ் தேசிய இனத்தின் ஒற்றுமையையும் அதன் அவசியத்தையும் வலியுறுத்தி நீங்கள் கவிதை எழுத வேண்டும், இதுதான் இந்த பொங்கல் திருவிழா கவிதை போட்டியின் கரு...!

தளத்தில் இங்கே பொங்கல் கவிதை போட்டிக்கென்று ஒதுக்கி இருக்கும் இந்த பக்கத்தில் தாங்கள் படைப்புகளை பதிவிட வேண்டும், தளத்தின் பிற இடங்களில் பதிவிடும் படைப்புகள் நடுவர்களின் மேர்பார்வைக்குச் செல்லாது.

முன்பு நடந்த போட்டிகளில் தலைப்பை கொடுத்து கவிதை எழுத சொல்லி இருந்தோம், ஆனால் இந்த முறை கருவைக் கூறி அதற்க்கு கவிதை எழுத சொல்லி இருக்கிறோம்.

விதிமுறைகள்;

1. ஒருவர் ஒரு கவிதை மட்டுமே எழுத வேண்டும், ஒருவர் ஒன்றுக்கு மேபட்ட கவிதைகள் பதிவு செய்தால் அவரது கவிதைகள் போட்டிக்கு சேர்த்துக் கொள்ளப்படாது.

2. நாங்கள் தந்திருக்கும் கருக்கு ஏற்ற தலைப்பை நீங்களே உருவாக்கிக்கொள்ள வேண்டும்.

3. போட்டிக்கான படைப்புகள் 24 வரிகளுக்கு மேல் மிகாமலும் 8 வரிகளுக்கு குறையாமலும் இருத்தல் வேண்டும், 24 வரிகளுக்கு மேல் மிகுந்து இருக்கிற போட்டிக்கான படைப்புகள் போட்டிக்கான தேர்வுகளுக்கு எடுத்துக்கொள்ளப் படாது.

4. நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது, அதை மாற்றும் உரிமை எவருக்கும் இல்லை.

5. சனவரி 20 ஆம் தேதி இரவு 12 மணிவரை தாங்களுக்கு எழுதுவதற்கு நாட்கள் ஒதுக்கப்பட்டு இருக்கிறது, அதற்கு மேல் பதிவு செய்யப்படும் போட்டிக்கான பதிவுகள் தவிர்க்கப்படும்.

6. படைப்புகள் நேர்மைக்கு புறம்பாகவோ, அல்லது அநாகரிகமாகவோ, அடுத்தவரை புன்படுத்துவதாகவோ இருப்பின், அந்த படைப்பாளியும், அந்த படைப்பும் போட்டிக்கான பதிவில் இருந்து நீக்கப்படும்.

7. தாய்மொழியில் புலமைப்பெற்று, தாய்மொழியை வளர்த்து அதை பெருமைபடுத்த நினைக்கும் உங்களின் உண்மையான ஆர்வத்திற்கு ஒரு உற்ச்சாகத்தை வளர்ப்பத்தற்கே இந்த போட்டியும் பரிசும் என்பதை மனதில் நிறுத்துதல் அவசியம்.

8. பிறமொழி கலப்பு இல்லாமல் கவிதைகள் இருக்க வேண்டும்...அதே போல எழுத்துப் பிழைகள் தவிர்க்கப் பட வேண்டும்...அதிகமான எழுத்துப் பிழையோ, பிற மொழிக் கலப்போ இருப்பின் அந்தக் கவிதை நடுவர் குழுவால் போட்டியில் இருந்து நிராகரிக்கப்- படலாம் !

9. மொத்தம் மூன்று பரிசுகள்,
முதல் பரிசு - மூன்றாயிரம்
இரண்டாம் பரிசு - இரண்டாயிரம்
மூன்றாம் பரிசு - ஓராயிரம்

10. 12 கோடி மக்கள் தொகையோடு உலகெங்கும் பறந்து விரிந்து கிடக்குற நமது தமிழ் தேசிய இனத்தின் ஒற்றுமையையும் அதன் அவசியத்தையும் வலியுறுத்தி நீங்கள் கவிதை எழுத வேண்டும். (இந்த கருவைக்கொண்டு எழுதப்பட்டு இருக்கும் படைப்பு மட்டுமே போட்டிக்கான தேர்வுகளில் இடம்பெறும் தகுதிப்பெற்றவை ஆகும், கருவிற்கும் படைப்பிற்கும் சம்பந்தம் இல்லாத எந்த படைப்பும் போட்டிக்கான தகுதியை இழந்தவையே....!

11. நீங்கள் எழுதும் தலைப்போடு (அடைப்பு குறியில்) பொங்கல் கவிதை போட்டி என்று குறிப்பிடுதல் அவசியமாகும்.

பரிசுபெற வாழ்த்துக்கள் தோழர்களே... இப்பொழுதிலிருந்தே படைப்புகளை பதிவிட தொடங்கிவிடுங்கள், ஜனவரி 30 ல் இறுதி முடிவுகளை காணலாம்.

இப்படிக்கு
திருவிழாக் குழு



கேட்டவர் : நிலாசூரியன்
நாள் : 6-Jan-14, 12:29 pm
0


மேலே