வாரி என்றால் என்ன?
ஸ்ரீ என்ற சமஸ்கிருதச் சொல்லுக்கு இணயான சொல்லாக ‘திரு’ சொல் தமிழில் உண்டு.பிற இந்திய மொழிகள் அதற்கு இணையான சொல் இல்லாத காரணத்திலும் அவர்களால் புதுச் சொல் ஒன்றை ஆக்கமுடியாத காரணத்தினாலும் ஸ்ரீ என்ற சொல்லையே பயன்படுத்துகின்றனர். சில கடைகளின் பெயருக்கு முன்பாக ஸ்ரீவாரி என்று போட்டுக் கொள்கிறார்கள். கிருபானந்தவாரியார் என்ற புகழ்பெற்ற ஆன்மீக சொற்பொழிவாளரும் நம்மிடையே இருந்தார். ’வாரி’ என்றால் என்ன?