இது சரியா? நியாயமா?
மொழியில் பிரதேச வழக்கு எழுத்து வழக்கு என இரண்டு வகைப்படும்.எழுத்து வழக்கை பெரும்பாலும் எல்லோராலும் புரிந்து கொள்ள முடியும்.பிரதேச வழக்கை அப்பிரதேசத்தை சேர்ந்தவர்களூக்கே தௌிவாகப் புரிந்து கொள்ள முடியும்.இப்படி இருக்க சில தொலைக்காட்சி,வானொலி அறிவிப்பாளர்கள் அவர்களது பிரதேசவழக்கில் அறிவிப்பு செய்வது சரியா?கானாததற்கு சில அறிவிப்பாளர்கள்100க்கு 25 வீதமே தமிழில் அறிவிக்கின்றனர்.மீதி ஆங்கிலத்திலேயே அறிவிக்கின்றனர்.நேர்காணல் நிகழ்ச்சி என்றால் கேட்கவே வேண்டாம்.அவர்களின் ஆங்கிலப் புலமையை எடுத்துக்காட்டவே முயல்கின்றனர்.இவை சரியா நியாயமா?