ஒரு வித்தியாசமான கேள்வி?
இது ஒரு வித்தியாசமான கேள்வி..!
"ஒருவனுக்கு ஒருத்தி..!"
இதில் ஒருவன் என்பது ஆணையும், ஒருத்தி பெண்ணையும் குறிக்கிறது. இதுதான் தமிழர் பண்பாடு என்று தமிழ் கூறும் நல்லுலகம் சொல்கிறது.!
எனது "ஏன்..ஏன்..ஏன்..சொல்வாயோ..?" என்ற படைப்பில் கருத்திட்ட ஒருவர்
"ஒரு ஆண் ஓரினச்சேர்க்கையாளராகவோ, ஒரு பெண் பல்லினச்சேர்க்கையாளராகவோ, அவரவர் விருப்பம் படி, தான் விரும்புபவர்களோடு இணைவது (அது ஆணோ , பெண்ணோ) எந்த விதத்திலும் தவறில்லை.. "
என்று குறிப்பிட்டு இருக்கிறார்..! ஒரு தமிழன் என்ற முறையில் என்னால் இதை ஏற்று கொள்ள முடியவில்லை..!
அவரது இந்த கருத்தை குறித்து தமிழர்களாகிய உங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன்..!
உங்கள் ஒவ்வொருவரது எண்ணத்தையும் மனம் திறந்து பதிலாக பதிக்கும் படி வேண்டுகிறேன்..!
-நட்புடன் குமரி