மீள் பதிவு

மீள் பதிவு ----இச் சொற் பிரயோகத்தை கணினித் தளங்களில் பரவலாக
பார்க்கிறேன் . மறு பதிவு என்பதற்கு மாற்றாக இதைப் பயன்படுத்துகிறார்கள் .
மீள் பதிவு ----வினைத் தொகை போலிருக்கிறது . வினைத் தொகை
மூன்று காலங்கள் காட்டும் என்பார்கள் . எடுத்துக்காட்டு ---ஊறுகாய்----
ஊறிய காய் ---ஊறும் காய் ---ஊறப் போகும் காய் .
மீள் பதிவின் நிலையை விளக்கி ஐயம் தீர்க்க வேண்டுகிறேன் என் இனிய
தமிழ்க் கவி நண்பர்களே !
------கவின் சாரலன்



கேட்டவர் : கவின் சாரலன்
நாள் : 1-Sep-14, 10:02 am
0


மேலே