"பொம்பளைங்க வர்ற கூட்டத்துல மேல் சட்டை போடாமல்
இப்படியா யேசுதாஸ் கவர்ச்சி காட்றது?"
---> கவர்ச்சி குறித்து பேசுவதற்கும், ஆபாசம் என்று கண்டிப்பதற்கும் ஆண்களுக்கு மட்டும்தான் தகுதி இருக்கிறதென கருதிக் கொண்டு,
பெண்களுக்கு பாடம் நடத்தும் ஆண்கள் தங்களுக்கு மட்டும்தான் 'அந்த' மாதிரியான உணர்வும், உரிமையும் இருப்பதாக காட்டிக் கொள்வது என்பது,
மனித இனங்களில் ஆண்களுக்கு மட்டும்தான் அனைத்து உணர்ச்சிகளும் சீண்டிக் கொண்டிருக்கிறது என்கிற இறுமாப்பு உணர்வை வெளிப்படுத்துவது மட்டுமல்ல, அதை சுட்டிக்காட்டும் யோக்கியதையும் தனக்கு மட்டும்தான் இருக்கிறது என்று நினைத்துக் கொள்வதுகூட 'ஆதிக்க' நிலைதான்.
இந்த ஆணின் 'ஆதிக்க' குணத்திற்காக பெண் ஏன் அடங்கிப் போக வேண்டும்? ஏன் அணுசரித்து செல்ல வேண்டும்?
- தமிழச்சி
04/10/2014
ஒரு தோழி தனது facebook இல் பகிர்ந்து கொண்ட பகிர்வு
இதற்க்கு நான் கொடுத்த கருத்து விளக்கம் சரியானதாக அமைந்துள்ளதா??
உங்கள் கூற்று மிக்கச் சரியானதே சகோதரி!
பெண்களை கவர்ச்சி காட்டுவது என்று கூறுவது மிகத் தவறான ஒன்று தான் ஏற்றுக் கொள்கிறேன்.
சில கேள்விகள் உங்களிடம்
1. பெண்களிற்கும் ஆண்களுக்கும் வித்தியாசம் உண்டா? இல்லையா?
2. பெண்களிடம் இருக்கும் சிறப்பம்சம்கள் ஆணிடம் உண்டா?( தாய்மை)
பெண்களை சிறந்த உடை அணிவிக்க கூறுவது உங்கள் குடும்பத்தார் மற்றும் உறவினர்களும் முதியவர்களும் மட்டுமே. ஆனால் உங்கள் நண்பரோ அல்லது காதலரோ , சக ஊழியரோ மாணவரோ ஒரு போதும் கூறுவதில்லை காரணம் அறிவீர் என்று அறிவேன்.
ஒரு வேலை உங்களிடம் உள்ள சிறப்பம்சங்கள் ஆண்களிடம் இருந்திருந்தால் ஆண்களுக்கும் இந்நிலை தான் உருவாக்கி இருக்கும் என்பதனை ஏற்றுக் கொள்கிறீர்களா?
உங்கள் கருத்தின் படி நீங்கள் நவீன உலகவியலை கருத்தில் கொண்டு இப் பதிவை இட்டிருந்தால்...
இப்பொழுதும் உலகின் சில பகுதிகளில் பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகிறார்கள் அவர்களின் வாழ்வுக் காலப் பகுதியில் அவர்கள் கவர்ச்சி என்ன என்பதை அறியாதவர்கள். அதனால் அதற்கான சொர்பாவனையும் அங்கு இல்லை ஆண் ஆதிக்கமும் அங்கு இல்லை. நான் கூறவது சரிதானோ?
ஆண்கள் ஒரு போதும் கூறவில்லை உங்களை நவீன காலத்துக்கு ஏற்றால் போல் மாறுமாறு.
ஆதிமனிதன் சிந்தித்தான் நாம் மிருகத்திலிருந்து வேறுபட்டிருக்க வேண்டும் என்று அது இன்று வரை வேறு பட்டுக் கொண்டே செல்கிறது பெண்களின் கலாச்சாரத்தில் மட்டும்.
நான் மறுக்கவில்லை ஆண்களிலும் வேறுபாடு ஏற்படுகிறது. ஏற்ப்பட்டது இல்லை குலை அதன் பிறகு வெட்டி சட்டை அதன்பிறகு காற்சட்டை அதன்பிறகு நீளக் காற்சட்டை அதன் பிறகு???
ஆண்கள் ஆதிக்கம் கொண்டவர்களே தான்
பெண்களைப் பேணிப் பாது காப்பதில்.
நீங்கள் ஒரு தமிழச்சியாக இருப்பதனால்oru சிறு விளக்கம் விளங்கி கொண்டால் சிறப்பு இல்லையென்றால் ???????? அது உங்க விஷயம்
ஒரு ஆண் பிறபெடுக்கும் சராசரியாக உங்கள் நிலையாகே தான் இருக்கிறான். ஆனால் அவன் இளமைப் பருவத்திற்கு வருகின்ற பொழுது அவனுடன் சகோதரிகள் இருப்பின் அவர்களுக்கு காவலாகவும் அவர்களின் தேவைகளை நிறைவேற்றுபவனாகவும் இருந்தே செயற்படுகின்றான் உங்களுக்கும் அண்ணன் அல்லது தம்பி இருந்தால் இது இலகுவாகப் புரியும் என்றே எண்ணுகிறேன்.
கணவனாகும் போது மனைவி தேவைக்கும் தனது தேவைக்குமாக வாழ்கிறான்
தந்தையாகும் போது பிள்ளைக்காகவும்....
மிதி இப்படியே தொடர்ந்தால் 10 பக்கம் வந்திடும்...
ஒரு சில ஆண்மகன்களை மற்றும் சில பெண்களை விதி விளக்காகவே கூறுகிறேன்
இவ்வாறன ஆண்களின் செயற்ப்பாட்டுக்கு பெயர் ஆதிக்கம் என்றிருந்தால் அது ஆண் ஆதிக்கமாகவே இருக்கட்டும் நீங்கள் கூறியது போல்.
மன்னியுங்கள்! நீங்கள் ஒருவேளை என்னைவிட வயதில் பெரியவராகக் கூட இருக்கலாம். இது எனது தனிப்பட்ட கருத்தேயாகும். இதற்கும் ஆண் ஆதிக்கம் என்று கூறிவிடாதீர்கள். ஒரு தனி மனித கருத்து என்றும் எல்லா ஆண்களையும் சாராது என்பதை அறிவீர்கள் என்று எண்ணுகிறேன்.