காப்புரிமை

எழுத்து தளத்தில் படைப்பாளிகள் நாங்கள் பதிவு செய்யும் படைப்புக்கள் அனைத்தும் வேறு ஒருவரின் இணையதளப்பக்கத்திலும்,இலக்கிய மின் இதழ்களிலும், சில வார இதழ்களிலும் திருடப்பட்டு பதிவு செய்யபடுகின்றன.

இன்று தோழர் ராம் வசந்த அவர்கள் இங்கிருந்து படைப்புக்கள் திருடப்பட்டு பதிவு செய்யப்பட்ட இணையதள இணைப்புகளை திரட்டி எண்ணம் பகுதியில் பதிவு செய்திருந்தார். அந்த தளங்களில் ஒருவரின் பிளாக்கரில் முற்றிலும் எழுத்து தள நண்பர்களின் படைப்புக்கள் தான் இருக்கின்றன. தலைப்புக்கள், படைப்பிற்கான படம் கூட மாற்றவில்லை.

ஆக

எங்களின் படைப்புக்கள் எழுத்து தளத்தில் பதிவு செய்யப்பட்டதற்கான சாட்சியாக ....

எங்களின் படைப்புக்கள் தான் என்று நாங்கள் நிரூபித்து பதிவு செய்துபிறகு படைப்புக்களுக்கு காப்புரிமை எழுத்து தள நிர்வாகத்தினால் தர இயலுமா ?

அவ்வாறு காப்புரிமை தர இயலும் என்றால்.. அந்த காப்புரிமை பெறுவதற்கான ஏதேனும் கூடுதல் செலவு இருப்பின் , அதை படைப்பாளியே ஏற்றுக்கொள்ளலாம் என்பது என் தனிப்பட்ட கருத்து

எங்கள் படைப்புக்கள் வேறு எவராவது திருடி பலன் அடைகிறார்கள் என்பதை நாங்கள் அறியும் போது .. எழுத்து தள நிர்வாகம் தரும் காப்புரிமை சான்றிதழை கொண்டு சட்ட்பூர்வமாக தட்டிகேட்க முடியும்.

இதுகுறித்து எழுத்து நிர்வாகத்தின் பதிலை எதிர்நோக்குகிறோம்.

எழுத்து தள தோழமைகளின் கருத்துக்களையும் அறிய ஆவல்...!


-இரா.சந்தோஷ் குமார்.



நாள் : 19-Nov-14, 11:19 am
0


மேலே