புலவர் யாரென்று தெரியுமா ?

கீழ்கண்ட பாடலை பாடிய புலவர் யாரென்று தெரியுமா ?
இந்த விருத்தப்பாடல் சங்க காலத்துப் புலவரா அல்லது அதற்கு முந்தைய புலவரா என அறியமுடியவில்லை. அறியப்பெற்றவர்கள் எமக்கு அறிய தருவீர்களா ?

பாடல்:


கெட்ட சாறு தவிடு கஞ்சி கிருமி யுண்ட மாவறைக்
கீரை வேர் தெளிந்த மோர் முறிந்த பாகு கிண்டிமா
இன்ன சோறு கொழியல் உப்பிடாத புற்கை யாயினும்
எங்கும் அன்பதாக நுங்க இன்பமாய் இருக்குமே
பட்ட பாகு பசுவினெய் பருப்பு முக்கனிக் குழாம்
பாளி தங்கடாளி தங்கள் பண்ணியார வகையுடன்
அட்ட பால் குழம்பு கன்னல் அமுதமோடு உதவினும்
அன்பினோடு அளித்திடாத வசனம் என்ன வசனமே.

******
ஆதிசிவன் செத்தானோ உமை செத்தாளோ
ஐங்கரனுஞ் செத்தானோ அரி செத்தானோ
வேதியனுஞ் செத்தானோ நீசெத்தாயோ
வெட்டவெளி ஆனந்தம் வெறும் பாழாச்சோ
நாதியற்றுப் போனாயோ வழி காட்டாயோ
நாயேனுக்கு இரங்கி வந்து நலந் தாராயோ
பாதிவழி தனில் அவதிப் படுத்து வாயோ
பாதகா திருச் செந்தூர்ப் பதியுளானே.



கேட்டவர் : வியன்
நாள் : 20-May-15, 2:34 pm
0


மேலே