எனக்கு இங்கு அனைத்துமே
குழப்பமாகிறது
ஒருவர் பணம் தான்
வாழ்க்கை என்கிறார்
ஒருவர் குணம் தான்
வாழ்க்கை என்கிறார்
ஒருவர் உணவு தான்
வாழ்க்கை என்கிறார்
ஒருவர் பெண்கள் தான்
வாழ்க்கை என்கிறார்
ஒருவர் அன்புதான்
வாழ்க்கை என்கிறார்
ஒருவர் சந்தோஷம் தான்
வாழ்க்கை என்கிறார்
இதில் என் குழப்பம்
ஒன்று தான்
விலங்குகள் அனைத்திற்கும்
வாழ்க்கை என்பது
உணவு எனும் ஒன்றோடு முடிகிறது
ஏன் மனிதனிடம் மட்டும்
வாழ்க்கைக்கு இத்தனை
விளக்கங்கள் அப்படி என்றால்
இவர்கள் சொல்லும் எதுவுமே
வாழ்க்கை இல்லையா.....?
இல்லை
வாழ்க்கை எதுவென எவருக்குமே
புரியவில்லையா.....?
வாழ்க்கை என்றால் மனிதர்
அனைவருக்கும் பொதுவானது எதுவோ அதுவாகத்தானே இருக்க இயலும்
சரி இது அனைத்தும் ஒருவனிடம் இருந்துவிட்டால் அதுதான் வாழ்வா சரி அனைத்தும் இருக்கும் அவன் எதையும் தேடமாட்டானா