சாலை வசதி இல்லாத மலைக் கிராமத்திற்கு வாக்கு எந்திரங்களை
கழுதைகள் மீது ஏற்றிச் சென்றனர் ---செய்தி
கழுதை : அழுக்குத் துணிச் சுமையை துறைக்கு கொண்டு போயிருக்கோம் .
வெளுத்ததை வீட்டுக் கொண்டுபோயிருக்கோம்.
இது என்னடா சுமை வித்தியாசமா கனக்குது ?
இன்னொரு கழுதை சிரித்துக் கனைத்துக் கொண்டே : இது தெரியாதா உனக்கு ...
நாளை தமிழ் நாடு முழுதும் தேர்தல். இங்க மலையில காரு லாரி போவாதாம் .
அதுதான் நம்ம முதுகுல வாக்கு எந்திரத்தை ஏத்திக்கிட்டு போறானுங்க .
முதல் கழுதை : என்ன அநியாயமடா இது .தேசிய விலங்கு புலியாம். தேசத் தேர்தல்ல
சுமை சுமக்க மட்டும் கழுதையா ? புலி முதுகுல ஏத்திக்கிட்டு போறது தானே ...
சனநாயக சேவை செய்யும் கழுதையையே தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும்
முதல் சட்டமன்ற கூட்டத்தில் அமளி துமளி செய்து இந்தக் கேள்வியை கேட்டே
ஆகவேண்டும்.
இரண்டாம் கழுதை : BRAVO ! இனத்திற்காக உரிமைக் குரல் கொடுக்கும் கழுத்தைத் தலைவா வா வா ..வாழ்க !
மற்ற கழுதைகளும் ஒருங்கிணைந்து கோரஸ் கனைப்பில் குரல் கொடுத்தன
இனி நீங்கள் தொடரலாம் நகைச் சுவையில் ..